பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 155

- தந்தையே, காலையில் நான் எண்ணியிருந்ததை உள்ளம் திறந்து சொல்கிறேன். இன்று மாலைக்குள் அவரை நிலப் பொறுப்பிலிருந்து நீக்கி வீட்டிலிருந்தும் விரட்டிப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமே கொண் டிருந்தேன்." - -

உலகம் அழிந்தாலும்

உன்புகழ் அழியாது மகனே நீ அவ்வாறு செய்தால் அவர் செய்த தையே நீயும் திரும்பச் செய்தவன் ஆவாய். உன் செய லால் அவர் வருந்தி அலேவதைப் பார்க்கும் ஊரார் உன் &னப்பற்றி என்ன சொல்வர்? அஃதன்றித் துன்பம் தரா மல் பொறுமை கொண்டு அவருக்கு மேலும் நன்மை செய்வாயாளுல் உன்னை எவ்வாறு மதிப்பர்? தமக்குத் துன்பம் செய்தவரைப் பொறுக்காமல் துன்பம் தந்து வருத் திண் வரை உலகோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார், ஆளுல் பொறுத்தவரையோ பொன்னப் பொதிந்து வைப் பது போல் தம் உள்ளத்தில் வைத்துப் போற்றுவர். பொன் தன்னைச் சுட்டாலும் ஒளிவிட்டு அணிகலன் ஆவ தன்ருே ? சுடச்சுட ஒளிருவதன்ருே பொன்? அதளுல், பொறுத்தவரும் பொன்போல் கொள்ளப்படத் தக்கவரே யாவர். - -

அது மட்டுமன்று, நீ அவரை வருத்துவாயாகுல் அதளுல் உனக்கு விளையும் மகிழச்சி எத்துணை நாளைக்கு நிற்கும் மகனே? “துன்பம் செய்தவரைத் துன்புறுத்திய

SS S SSAS SSAS SSAS SSAS SSAS SSAS ----------01:39, 31 ஜனவரி 2016 (UTC)~~

  • ஒறுத்தாரை ஒன்ருக வையாரே வைப்பர் - பொறுத்தாரைப் பொன்போல் பொதித்து. * ஒறுத்தார்க் கொருநாள இன்பம்; பொறுத்தாக்குப்

ப்ொன்றும் துணையும் புகழ். -