பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறர் பொருளை விரும்ப வேண்டாம்

குடிகெடும் ;

குற்றம் படும்

மக்காள், இன்று உங்களோடு மற்ருெரு நண்பரை யும் காண்கிறேனே! மிக மகிழ்ச்சி.'

தந்தையே, இவர்தான் எங்கள் உறவினர் ; எங் கள் குடும்பத்தின் நிலப் பொறுப்பைக் கொண்டுள்ளவர். என்மேல் தற்போது அன்புகொண்டுள்ளவர். என் னுடன் தங்களைக் காணவிரும்பினர் ; அழைத்து வந் தேன்.'

உடன் வந்தவர்; சான்ருண்மை வாய்ந்த ஐயா ! தம்பி கூறுவது அவனது பெருந்தன்மையைக் காட்டுவ தாகும். நான் நேற்று வரை அவனுக்குத் தீயன எண் னியவன். இன்று தம்பியின் பெருந்தன்மையால் திருந்தியவன். அதற்கு வாய்ப்பளித்த தங்களின் வாழ்த் தைப் பெறவே வந்தேன்.

நன்று, ஐயா ! தன் தவற்றை உணர்ந்தவர்களைக் காண்பதே ஒரு பேறு ஆகும்.'

' செல்வ வளத்தை இழந்த நான். எனது பெரு மைக் குணத்தால் பிறரைக் கெடுத்தாலே வாழலாம்