பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 179

சொல்க ! ஆனால், பயனில்லாதவற்றைச் சொல்லாதிருக் கும் தன்மை சிறந்தது என்பேன்.

மக்காள், சொல் என்பதே ஏதேனும் ஒரு பொருளைக் கொண்டதாகும். பொருள் பயன் தந்தால்தானே அது பொருள் எனப்படும். அந்தப் பயனும் பெரும் பயனுக அமைவதே சிறந்தது. அறிவில் சிறந்த சான்ருேர் எல்லாவற்றிலும் அருமையான பயன்களையே நாடி நிற். பர். "அருமையான பயன்களை நாடி கிற்கும் அறிஞர் பெரும் பயனைத் தராத சொற்களைச் சொல்ல மாட்டார்.

மகனே, அறிஞரினும் தெளிந்த அறிஞர் உண்டு. அவர் எதையும் தெளிவோடு நோக்கும் திறன் படைத் தவர். தம் கருத்துக்களை வாழ்வியலோடும், உலகிய லோடும் ஒட்டிப் பார்ப்பர். பார்த்து அவற்றின் தீமை களை ஆராய்ந்து முடிவு காண்பர். அம்முடிவால் உள் ளத்தில் ஐயமும், கலக்கமும் இல்லாத நிலை பெறுவர். அந்த நிலைதான் மயக்கம் அற்ற நிலை. மயக்கமற்ற அறி ஞர் குற்றமற்ற அறிவினராவர். "மயக்கத்தினின்றும் தெளிவுபெற்ற குற்றமற்ற அறிஞர் பயனில்லாத சொற் களே மறந்தும் சொல்லமாட்டார். அறிஞரும், சான்ருே ரும் பயன்தரும் சொற்களைச் சொல்லுதலை இயல்பாகக் கொண்டவர்கள். நீங்களும் கொள்க !

பயனுள்ளவற்றைச் சொல்பவர் சான்ருேர் என்று குறித்த நான் பயனில்லாதவற்றைச் சொல்லுவோர் எத்

SAMMAMMAMMAAAASASASS

  • அரும்பயன் ஆயும் அறிவினர் சொல்லார்,

பெரும்பயன் இல்லாத சொல்,

  • பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார், மருள்தீர்ந்த

மாசறு காட்சி யவர்.