பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 193

ஈடாகும் கைம்மாற்றைச் செய்தால் மழை ஏற்றுக் கொள்ளும் என்று கருதுகிருயோ மகனே ?

இல்லை தந்தையே. கைம்மாறு கருதி மழை பெய்வதில்லை என்பதை அறிவேன்.'

மகனே, மழை அறிவிக்கும் உண்மை ஒன்று உண்டு. கைம்மாறு கருதாத மழையால்தான் உலகமே இயங்குகிறது. மக்களும் மழையின் செயலை எண்ணிப் பார்த்துக் கைம்மாறு கருதாத உதவியைப் பிறர்க்குச் செய்து பொது வாழ்வை இயங்க வைக்க வேண்டும் என்ற உண்மையையே மழை தன் செயலால் அறிவிக் கிறது எனலாம். 'உலகோர் தமக்கு ஏற்ற காலத்தில் பெய்த மழைக்குக் கைம்மாருக ஏதும் செய்ய முடியாது. அ.தேபோன்று மாந்தருக்கு ஏற்ற காலத்தில் ஒத்த உதவி யைச் செய்வது ஒரு கடப்பாடாகும். அந்தக் கடப்பாடும் கைம்மாறு வேண்டுவதன்று. மக்களது பொது வாழ்வின் இயக்கமும் கைம்மாறு கருதாத கடப்பாட்டால் அமை வது. மன்பதை எனப்படும் மக்கட் கூட்டத்தின் வாழ்வே ஒருவர் மற்றவருக்கு உதவி செய்து கூட்டுறவு கொள்ளும் வாழ்வாகும். அதனை எந்த அளவு செய்ய வேண்டும் என்பதையும் மழையே விளக்குவதுபோல் செயல்புரிகிறது. மகனே, மழையின் செயல்களை அறி வாயே ?! -

'அறிவேன் தந்தையே. மழை முயன்று கடல் நீரை ஆவியாக்கி முகந்து ஒன்று சேர்க்கிறது. சேர்த்த ஆவியை நீராக்கி யாவர்க்கும் ஒப்பப் பெய்கிறது; கால மறிந்து பெய்கிறது.' -

  • கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட் {

டென்னுற்றுங் கொல்லோ உலகு.