பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 - வள்ளுவர் வாழ்த்து

பொன்ருதது புகழ்

கண்ணன் : தந்தையே, பிற எல்லாவற்றினும் புகழ் சான்ருேரால் இவ்வாறு சிறப்பிக்கப்பட வேண்டிய காரணம் என்ன ?

மகனே, பிற எல்லாம் என்று எவற்றைக் குறிக் கிருய் ? .

பொன், பொருள், உயர்நிலை முதலியவற்றை எண்ணினேன்.” r

மகனே, இவையெல்லாம் ஒன்றைக்கொண்டு மற் ருென்றைப் பெற்றுக்கொள்ளப் பயன்படுவன. ஒன் றுக்கு ஒப்பாக மற்ருென்றைச் சொல்லிவிடலாம் ; கொள் ளவும் கொள்ளலாம். புகழ் இத்தகையது அன்று. புகழ் ஒப்பற்ற ஒன்று. மேற்சொல்லப்பட்ட பொன், பொருள் முதலியன எல்லாம் எத்துணைக் காலத்திற்கு நிலைக்கும் ? அவை அழிவன. புகழ் ஒப்பற்ற ஒன்ருய் அழியாதது. ஆகையால் தான், புகழ் மேம்பட்டதாகச் சான்ருேரால் உரைக்கப்படுவதாயிற்று. இத்தகைய *மேம்பட்ட புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒன்ருக அழிவின்றி நிலத்திருப்பது வேறு ஒன்றும் இல்லை.

கண்ணம்மா தந்தையே இந்த உலகத்தில் பெற வேண்டியதாக ஒன்றே ஒன்றைக் குறிப்பதென்ருல் புகழ் ஒன்றையே குறிப்பிடலாம் என்ருகிறது.

ஆம் மகளே, அதிலென்ன ஐயம் ? புகழ் ஒன்று தான் இல்லறத்தார் பெறவேண்டியது. அவர் கடைப் ゞー

  • ஒன்ரு உலகத் துயர்ந்த புகழல்லால்

பொன்ருது நிற்பதொன் றில்.