பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 17

அமர்ந்திருந்தனர். எது காரணமாகவோ அவன் அவளே விட்டு நகர்ந்தான். நகர்ந்த அளவில் அவன் தீயால் பற்றப்பட்டவன் போன்று துடித்துப் போனன். சட் டென்று மீண்டும் வந்து அவளை நெருங்கினன். நெருங் கியதும் மலர்ப் பொய்கையில் குளித்தவன் போன்று குளிர்ந்து மகிழ்ந்தான். அவனுக்கு இந்தச் சுவை வியப் எளித்தது; சிந்தித்தான் :

  • நீங்கினல் சுட்டுத் தீய்க்கின்றது ! நெருங்கில்ை குளிர்வித்து இன்புறுத்துகின்றது ! இத்தகைய விந்தைத் தீயை எங்கிருந்து பெற்ருள் இவள்?’ என்று புலம்பினுன்.

ஆம், ஆம். "தீயைத் தொட்டால்தான் அது சுடும், அல்லாது விட்டால் சுடுமோ ? விேர் பிரியுங்கால் ஏற் படும் காமத் தீயோ விட்டு நீங்கினல் சுடுகிறதே சுடு வதில் பெயர்பெற்றிருக்கும் தி இக்காமத்தின் முன் வலி யற்றுப் போகிறதே !' என்று அவன் புலம்பலுக்கு எதிர்ப்புலம்பல் வைத்தாள் அப்பூவை. மணமக்காள், நீங்களும் புலம்பாதீர்கள்!!-என்றுமுடித்தார் வள்ளுவர்.

- இதுபோதில் அவன் தன்னருகில் பெண்ணுருவில் இருந்த தன் சொத்தைப் பார்த்தான்; சொக்கிப் போனுன். அவள் ஆணுருவில் கிடைத்த புதையலைப் பார்த்தாள் ; பூரித்துப் போனுள்.

இதுகண்டுமகிழ்ந்த வள்ளுவர் நகைத்தார். அவரது நகைப்பிலே நாகரிகமான நகைச்சுவை மிளிர்ந்தது.

- مس۔۔۔۔۔۔۔ب۔۔۔۔ AASAASAASAASAASAASAASAASAAAS

  • நீங்கின் தெறுTஉம் குறுகுங்கால் தண்னென்னும்

தீயாண்டுப் பெற்ருள் இவள் ! * தொடிற்சுடின் அல்லது காமநோய் போல

விடிற்சுடல் ஆற்றுமோ தீ!