பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 33

சூட்டுக்கொரு சுவை உண்டே சுவைக்காகவா அஞ்சுகிருய்?' என் ருள் தோழி.

இல்லை, இல்லை. என் அன்புருவானவர் என் நெஞ்சத்தை விட்டு நீங்காமல் நெஞ்சத்துள்ளே நிறைந் துள்ளார். இந்த வெம்மையான சோற்றை உண்டால் என் நெஞ்சுள்ளே இருக்கும் அவரைச் சுட்டுவிடுமென்று அஞ்சுகிறேன்' என்ருள் அந்த மலரன்ன கண்ணுள்.

தோழி நகைக்கவில்லை ; மாருக உள்ளம் பூரித்தாள். அவன்மேல் அவளுக்குள்ள அன்புப் பிணைப்பைப் பாராட்டிக் கொண்டாள். -

மகளே, மளுளனே நெஞ்சிற் பதித்தவளே நினை

விற்கொள்க ! கண்ணுள்ளே வைத்ததன் கருத்ை

இ. 芭声出 அறிந்தாயா? கணவன் என்ருல் அவன் கண்ணன்ருே ? அதனுல்தான் கண் அவளுக-கண் - அவன்-கணவனுகக் கொண்டாள். அவள் கண்ணை ம் பெறுக ; பெற்றுக்

  • ご** '

கண்ணம்மாவாகுக !' என்று நிகழ்ச்சி பொதிந்த கருத் துரை வழங்கிளுர் வள்ளுவர். அவளுக்குக் கண்ணம்மா என்பதை நாமும் காரணப் பெயராகக் கொள்ளுவோம்.

கேட்ட குமரியாம் கண்ணம்மா மையிடாமலே இருக்கவா விரும்புவாள் ? அல்லது சுடு சோற்றைத் தின்னக் கூடாது என்று முடிவு கட்டுவாளா? அவ்வளவு கருத்துக் குருடியல்லள் இந்தப் பெண்ணம்மா.-ஒரு மனையாள் சுவைக்க வேண்டியதெல்லாம் மணுளனது அன்பையே காணவேண்டிய தெல்லாம் கணவனது ;ழகையே. எந்தப் பிற காட்சியையும் அவனைக் கண்ணுகக் கொண்டு காண்பதுவே இன்பம். நெஞ்சத்

AeSAeAAASAASAASAASAASAAAS

- محمدامین

  • நெஞ்சத்தார் காத லவராக, வெய்துண்டல்

அஞ்சுதும் வேயாக் கறிந்து.