பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகளே கேள் !

பெண்மையே பெருந்தகவு

"மேன்மை தங்கிய பெண் இனத்துச் சார்பாளினி யாகிய திருமதி கண்ணம்மா அவர்களே, அடுத்து இப் போது உங்கட்கு வாய்ப்புக்_கிடைக்க இருக்கிறது. தந்தையே, அப்படித்தானே இஎன்று கேட்டு, கடைக் கண் ணுல் கண்ணம்மாவைப் பார்த்து முடித்தான் கண்ணன்.

ஆமாம் மகனே, வாய்ப்பும் அப்படித்தான்' மேன்மை தங்குவதிலும் அத்தகையதுதான் பெண் இனம். மேன்மை மட்டும் அன்று ; மாட்சிமை உடை யதும் ஆகும் பெண் இனம். மேலும் பெண்ணைவிடப் பெருந்தகுதி வாய்ந்தவை உலகில் எவையும் இல்லைஎன்று கூடக் கூறுவேன்.

கண்ணு நீயே கூறு பெண், கற்பு என்று சிறப் பிக்கப்படும் உள்ள உறுதியாகிய பண்பு உண்டாகப் பெற்ருல், அப்பெண்ணவிடப் பெருந்தகுதியுடையவை உலகில் பிற எவையேனும் உள்ளனவோ ?-என்று வினவி ஞர் தந்தை."


. سمي -.

பெண்ணிற் பெருந்தக்க யாவுள' கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்?