பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வாழ்த்து 71

இல்லற வாழ்க்கை வேறு எவ்வகை மாட்சியைப் பெற்றிருந் தால்தான் என்ன ? பெரும் செல்வம், குடிப் பெருமை

முதலிய எவ்வகை மாட்சியைப் பெற்றிருந்தாலும் அவற்ருல் பயனில்லை.

மகளே ! நீயே சொல்க ! இல்லத்திற்கு உரியவள் மாண்பு உடையவளானல் அவ்வாழ்க்கையில் இல்லாத இன்பம் என்ன உண்டு :

' எல்லா இன்பமும் உண்டு தந்தையே '

நன்று ; இல்லத்திற்கு உரியவள் மாட்சிமை அற்ற வள் ஆல்ை அவ்வாழ்க்கையில் உள்ள மகிழ்ச்சி என்ன, மகளே ?'

ஒரு மகிழ்ச்சியும் இராது தந்தையே '

தெய்வம் தொழாத சிறப்பு

- இதற்கு மேலும் பெண்ணுக்குப் பெருமை உண்டு.

அது கருதித்தான் பெண்ணைவிடப் பெருந்தகுதி படைத் தன இல்லை என்றேன். பெண்ணுக்கு இத்துனைப்

பெருமை அமைய அடிப்படையானது அவள் கைக் கொண்ட கற்பேயாகும். கற்பு எனப்படுவது உள்ளம் கலங்காத உறுதிப்பாடு ஆகும். உறுதி எப்பொழுதும் ஒரு முனை நோக்கியே நிற்பது. சிறிதளவு கூட வேற்று முனைக்கு அசைந்து கொடுப்பது அன்று. கற்பு என்னும் உறுதி தனது கணவனது அன்பையே குறியாகக் கொண்

  • இல்லதென் இல்லவள் மாண்பால்ை உள்ளதென்

இல்லவள் மாணக் கடை?