பக்கம்:வள்ளுவர் வாழ்த்து.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 வள்ளுவர் வாழ்த்து

பொறுப்பைத் தாய் ஏற்பாள். அதல்ை மக்களின் உடல் வளத்தையும், உள்ள வளத்தையும் வளர்த்தவள் ஆவாள். தந்தை அவர்களை அறிவு வளர்ச்சியில் செலுத்த வேண்டிய கடமைப்பட்டவன். தாம் பெற்ற மக்களுக்குக் கல்வி தந்து, அக்கல்வியால் அறிவு வளர்ச் சியைத் தந்து மேம்படிடவராக்க வேண்டியது தந்தை யின் பொறுப்பு. ஒரு தந்தை தன். மகனுக்குச் செய்ய வேண்டிய நல்ல உதவி அவன் கற்றேர் கூடிய அவையில் முதல்வகை நல்லிடம் பெறுமாறு கல்வியறிவு பெறச் செய்தலாகும். " . . ...

இவ்வாறு அவையில் சிறந்தோராகத் தம் மக்கள் அமைவதைக் காணுதல் ஒரு தந்தைக்குப் பூரிப்பான இனிமையாகும். இந்த இனிமையால் தந்தை தன்ன லம் பெற்றவன் ஆவான் என்பது மட்டுமல்ல, பொது நலத்திற்கும். அடிகோலியவன் ஆவான். அது அவன் தன் மக்களுக்குத் தரும் கல்வியறிவின் பெருமையைப் பொருத்தது ஆகும். - -

தந்தையர் மக்களுக்குக் கல்வியை அடைவிக்கும் போது மக்களின் தன்மையை அறியவேண்டும். அவர் தனால் ஏற்கத்தக்க எல்லாவகைக் கல்வியையும் பெறச் செய்ய வேண்டும். அக்கல்வியறிவைப் பயன்படுத்தும் தகுதியையும் பெறச் செய்யவேண்டும். தாம் தன் வாழ் வில் பட்டறிந்தவற்றை எல்லாம் அவர்க்கும் அளிக்க வேண்டும். தம் வாழ்வில் நேர்ந்த குறை உண்டெனில் அது அவர்க்கு நேராமல் செய்தல் வேண்டும். தம் மக்கள் தம் வாழ்விலும் மேம்பட்ட வாழ்வை அடையுமாறு

....--మ్రాడ్క్లి ::షో...,–. . . .

  • தந்தை மகற்காற்றும் நன்றி, அவையத்து முந்தி விருய்பச் செயல். .