பக்கம்:வழிகாட்டி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சீரலைவாய் S9

(வானத்து இசைக் கருவிகள் முழங்க, திண்ணிய வயிரத்தையுடைய கொம்புகள் உச்ச ஒலியோடு ஒலிக்க, வெள்ளிய சங்குகள் சப்திக்க, வன்மையைத் தன்னிடத்திற் கொண்ட இடியைப் போன்ற முரசம் ஒலிப்பதோடு பல பீலிகளையுடைய மயிலாகிய வெற்றிக்கொடி அகவ எழுந்தருள்கிறான் முருகன்.

காழ்-வயிரம். வயிர்-ஊது கொம்பு. வளை-சங்கு.) வானமே வழியாக முருகன் வேகமாக எழுந்தருள் கிறான். அடியார்களுக்கு அருள் செய்வதில் அவனுக்கு வேகம் அதிகம். உலகமெல்லாம் போற்றும் சிறப்பை யுடைய திருச்சீரலைவாயை நோக்கி வருகிறான். அத் திருத்தலத்திற்கு வந்து தங்குகிறான்.

விசும்பா றாக விரைசெலல் முன்னி உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே; அதாஅன்று. (ஆகாயமே வழியாக விரைந்து செல்லுதலைத் திரு வுளத்தே கொண்டு, உலகம் புகழ்கின்ற மிக உயர்ந்த மேலான சிறப்பையுடைய அலைவாய்க்குச் சென்று தங்குதல் அவனுக்கு நிலைபெற்ற இயல்பு. அது மாத்திரம் அன்று.

முன்னி-எண்ணி. சேறல்-செல்லுதல்.) திருச்செந்தூருக்கு அலைவாய் என்பது பழைய பெயர். அது நாமனூரலைவாய் என்றும் வழங்கும். திருச்சீரலைவாயென்று அடைகளுடன் சேர்த்தும் வழங் குவர். முருகன் திருக்கோயில் கடல் அலைகள் மோதும் இடத்திலே அமைந்திருத்தலின் இதற்கு இப்பெயர் வந்தது. மிகப் பழங்கால முதலே இத்தலம் தமிழ்ப் புலவர்களால் போற்றப் பெற்று வருகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/101&oldid=643706" இலிருந்து மீள்விக்கப்பட்டது