பக்கம்:வழிகாட்டி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1CO வழிகாட்டி

"திருமணி விளக்கின் அலைவாய்ச்

செருமிகு சேஎய்'

என்று அகநானூற்றிலும்,

"வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில் நெடுவேள் நிலைஇய காமல் வியன்றுறை" என்று புறநானூற்றிலும் இதன் சிறப்பைப் புலவர் பாடி யுள்ளனர்.

“வரைவயிறு கிழித்த நிழல்திகழ் நெடுவேல் திகழ்பூண் முருகன் தீம்புனல் அலைவாய்' என்பது ஒரு பழம்பாட்டு.

முருகன் சூரசங்காரம் செய்த பிறகு வெற்றிக் கோலத்தோடு எழுந்தருளிய இடமாதலின் இதற்கு ஜயந்தி என்ற திருநாமம் வந்த தென்றும், அதுவே செந்தி, செந்தில், செந்தூர் என்று மாறி வழங்குமென்றும் கூறுவர். இத்தலத்தில் சண்முகன் பற்றிக் கூறுகையில் நக்கீரர் அறுமுகத் திருக்கோலத்தை வருணித்ததற்கு இதுவே காரணமாக இருக்கலாம்.

'திருப்பரங்குன்றத்தில் முருகன் எழுந்தருளியிருக் கிறான். திருச்சீரலைவாயில் ஆறுமுகனாகச் சென்று தங்குகிறான்' என்று கூறி, 'இவ்வளவு மாத்திரம் அன்று; இன்னும் உண்டு. கேட்பாயாக’ என்று மேலே திருவாவினன்குடியைப் பற்றிச் சொல்லத் தொடங்கு கிறார் நக்கீரர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/102&oldid=643708" இலிருந்து மீள்விக்கப்பட்டது