பக்கம்:வழிகாட்டி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாவினன்குடி

முனிவர்

முருகன் திருவாவினன்குடியில் எழுந்தருளியிருக் கிறான். அவனைத் தரிசிக்கும்பொருட்டு முனிவரும், கந்தரு வரும், அரம்பையரும், திருமாலும், சிவ பிரானும், இந்திரனும் வருகின்றார்கள். ஒரே கூட்டமாக இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் யான், எனது என்ற உணர்ச்சியை இழந்த முனிவர்களே முன்னால் நிற்கிறார் கள். யாரேனும் ஒருவரிடத்தில் ஒரு காரியம் ஆகவேண்டு மானால் அவருக்குப் பிரியமான மனிதரை முன்னிட்டுக் கொண்டு போவது உலகில் வழக்கமாக இருக்கிறது. இங்கே தேவர்கள் தங்கள் காரியத்தை முருகனைக் கொண்டு நிறைவேற்ற எண்ணி, அவனைத் தரிசிக்கத் திருவாவினன்கு டிக்கு வருகிறார்கள். அப்போது முருகனுக்கு உவப்பான அன்பர்களாகிய முனிவர்களை முன்னிட்டுக் கொண்டு கோயிலுக்குள்ளே புகுகிறார்கள். பூவுலகத்தில் வாழ்பவர்களானாலும் ஊனுடம்பு உடை யவர்களானாலும் அந்த முனிவர்களுக்கு முருகன் சந்தி தானத்தில் முதலிடம் கிடைக்கிறது. பக்தி சித்தி காட்டும் பெருமான் அவன் அல்லவா? அவ்வாறு முன்னாலே திருக்கோயிலுக்குள்ளே புகும் அணுக்கத் தொண்டர் களாகிய முனிவர்கள் மிகப் பெரியவர்கள். அவர்கள் பெருமையை நக்கீரர் சொல்லுகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/103&oldid=643709" இலிருந்து மீள்விக்கப்பட்டது