பக்கம்:வழிகாட்டி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 வழிகாட்டி

மரவுரியை ஆடையாக அணிந்து கொண்டிருக் கிறார்கள் அம்முனிவர்கள். அவர்கள் வயசை யாராலும் அளவிட முடியாது போலும் நரை முடி ஒன்றுதான் அதைப் புலப்படுத்துகிறது. அந்த முடி நிறத்தாலும் உரு வத்தாலும் வலம்புரிச் சங்கைப் போலத் தோன்றுகிறது. உடம்பிலே ஒரு தேசு. விரதத் தீயிலே புடம்போட்ட பொன் அல்லவா? மாசு இம்மியேனும் இல்லாமல் இருக்கிறது. அவ்வொளி மிக்க திருமேனியின்மேலே மான் தோலைப் போர்த்திருக்கிறார்கள். அவர்கள் மார் பிலே தசைப்பிடிப்பே இல்லை. எலும்புகள் எண்ணிக் கொள் என்பனபோல வரிசையாகப் புடைத்துத் தோன்று கின்றன. எவ்வளவோ நாட்கள் ஒரேயடியாகப் பட்டினி கிடந்து விரதம் காத்தவர்கள் அவர்கள்.

அவர்கள் உள்ளமும் மாசு நீங்கியது. பகையுணர்ச்சி யென்பது அணுவளவும் அங்கே இல்லை. இம்சை யென்பது அடியோடு நீங்கிய திருவுள்ளம் அது. அவர் களுடைய பேரறிவுக்கு எல்லையே இல்லை. எல்லா வற்றையும் கற்று உணர்ந்தவர்களாக உலகத்தார் கருதும் பெரியவர்கள் கூட இன்னும் தெரிந்து கொள்ளாத பொருள்களைத் தெரிந்து கொண்ட மெய்யறிவை உடை யவர்கள். எஞ்சிய பொருளை ஏமுற நாடி விளக்கும் முருகன் அடியார் அல்லவா? அவர்கள் இயற்கையாகவே அறிவு படைத்ததோடு எத்தனையோ காலம் கல்வி கற்ற வர்கள்; படித்தவர்களுக்கெல்லாம் தலையெல்லையிலே நிற்பவர்கள்; ஆசையும் சினமும் அற்ற மெய்ஞ்ஞானச் செல்வர்கள்.

ஊணின்றி உடம்பு இளைத்திருப்பதைக் கொண்டு அவர்கள் உள்ளத்தே ஏதேனும் துயரம் இருக்குமென்று நினைக்க ஒண்னுமோ? வேண்டுதல் வேண்டாமையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/104&oldid=643711" இலிருந்து மீள்விக்கப்பட்டது