பக்கம்:வழிகாட்டி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாவினன்குடி 103

லாத திருவுள்ளத்திலே இடும்பை ஏது? இடும்பைக்கு இடும்பை படுக்கும் பெருவிறல் படைத்த பெரியவர்கள் அம்மு னிவர்கள். அவர்களுக்கு யாரிடத்தும் எப் பொருளிடத்தும் வெறுப்பு இல்லை.

இத்தகைய, உள்ளமும், உடம்பும் தூயவர்களாகிய முனிவர்கள் முன்னே புகுகின்றார்கள்.

சீரை தைஇய உடுக்கையர் சீரொடு வலம்புரி புரையும் வால்நரை முடியினர் மாசற இமைக்கும் உருவினர் மானின் உரிவை தைஇய ஊன்கெடு மார்பின் என்பெழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல் பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும் கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத் தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு கடுஞ்சினம் கடந்த காட்சியர் இடும்பை யாவதும் அறியா இயல்பினர் மேவரத் துனியில் காட்சி முனிவர் முற்புக. (மரவுரியை, உடையாக அணிந்தவர், அழகோடு வலம் புரியை யொத்த வெண்மையான நரை முடியை உடை யோர், மாசு இல்லாமல் விளங்கும் திருமேனியை உடையோர், மான்தோலைப் போர்த்த தசைகெட்ட மார்பில் எலும்புகள் மேலே தோன்றி அசையும் உடம்பை உடையோர், நல்ல நாட்கள் பலவற்றில் ஒருங்கே உணவை உண்ணாது விட்டவர், பகையும் இம்சையும் நீக்கிய மனத்தினர், கற்றவர் சிறிதும் அறியாத பேரறி வினர், கற்றவர்களுக்கு எல்லையாக நிற்கும் தலைமை யுடையோர், காமமும் மிக்க சினமும் நீத்த அறிவுடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/105&oldid=643713" இலிருந்து மீள்விக்கப்பட்டது