பக்கம்:வழிகாட்டி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 வழிகாட்டி

யோர், சிறிதளவேனும் இடும்பையென்பதை அறியாத இயல்புடையோர், மனம் பொருந்த வெறுப்பில்லாத ஞானம் பெற்றவர் ஆகிய முனிவர் முன்னாலே புக

சீரை-மரவுரி. தைஇய-புனைந்த உரிவை-தோல். இகல்-பகை. செற்றம்-இம்சை செய்யும் உணர்ச்சி. கா மம்-ஆசை. இடும்பை-துன்பம். யாவதும்-சிறிதேனும். துனி-வெறுப்பு.)

கந்த ருவர் இந்த முனிவர்களை முன்னிட்டுக் கொண்டு தேவர் கள் வரும்போது முருகனுக்கு விருப்பமான இசையைப் பாடுவதையே வாழ்க்கைப் போக்காக உடைய கந்தருவ சாதியினர் ஆணும் பெண்ணுமாகப் பாடுகின்றனர்.

அக்கந்தருவரின் உடை மாசின்றித் தூயதாகவும் மிக மெல்லியதாகவும் இருக்கிறது; புகையையே ஆடை யாக உடுத்துக் கொண்டார்களோ என்று எண்ணும்படி அவ்வளவு மெல்லியதாக இருக்கிறது. மார்பிலே அப் பொழுதுதான் வெடித்து அலர்ந்த பூவால் கட்டிய மாலையை அணிந்திருக்கின்றனர். கையிலே யாழ்; காதிலே வைத்துப் பார்த்துச் சுருதி கூட்டிச் சரியாக நரம்புகளை முடுக்கி வைத்த யாழ். அதிலே நன்கு பயின்றவர்களாகிய அவர்கள் உள்ளம் அன்புடையது; உரை மென்மையானது, அவர்கள் முருகன் சந்நிதானத் திலே வாசிக்கிறோம் என்ற அன்பும் பெருமிதமும் கொண்டு மெல்லப் பாடி யாழை வாசிக்கிறார்கள்.

புகைமுகந் தன்ன மாசில் துவுடை முகைவாய் அவிழ்ந்த தகைசூழ ஆகத்துச் செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/106&oldid=643716" இலிருந்து மீள்விக்கப்பட்டது