பக்கம்:வழிகாட்டி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 - வழிகாட்டி

பொன்உரை கடுக்கும் திதலையர் இன்னகைப்

பருமம் தாங்கிய பணிந்துஎந்து அல்குல்

மாசில் மகளிரொடு மறுஇன்றி விளங்க. (நோய்களே இல்லாமல் அமைந்த உடம்பை உடை யோர், மாமரத்தில் விளங்கும் தளிரை ஒத்த மேனியை உடையோர், விளங்குந் தோறும் பொன்னை உரைத்தாற் போன்ற தேமலை உடையோர், இனிய ஒளியை உடைய மேகலையைத் தாங்கியதும் தாழ்ந்தும் உயர்ந்தும் உள்ளதுமாகிய அல்குடையுடையோர் ஆகிய குற்றமற்ற மகளிரோடு அப்பாடல் குற்றமில்லாமல் விளங்க.

கடுக்கும்-ஒக்கும். திதலை-தேமல். பருமம்-பதி னெட்டு வடங்களையுடைய மேகலை.)

தேவர் வருகை

முனிவர் முன்னே புக, கந்தவரும் அவர் மகளிரும் பாடி வர, இவ்வளவு ஏற்பாடுகளோடு முருகன் திரு வுள்ளத்தைக் கனிவிக்கும் நோக்கத்துடன் பின்னே வரு Liçifff=5&Т tiілт?

அதோ முன்னாலே நிற்கிறானே அவனை இன்னா னென்று அவன் ஏந்திய கொடியே காட்டுகின்றது. கருடக் கொடியை அல்லவா காண்கிறோம்? கருடன் வலிமை என்ன சாமானியமா? நஞ்சை உள்ளே ஒடுக்கி வைத் திருக்கும் துளையை உடைய பற்களோடு, நெருப்பை வீசினாற் போல மூச்சுவிடும் பயங்கரமான மிக்க வலிமையுடைய பாம்பு எதுவானாலும், கருடன் சிறகை அடித்தாலே போதும், உடனே மயங்கி விழுந்து செத்துப் போகும். வரிகளையுடைய வளைந்த சிறகைப் பாம்பு படும்படியாகப் புடைக்கும் அந்தக் கருடனைத் தன் நீள் கொடியிலே வைத்தவன் திருமால். அவன் முருகனைக் காண வருகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/108&oldid=643720" இலிருந்து மீள்விக்கப்பட்டது