பக்கம்:வழிகாட்டி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாவினன்குடி 107

அடுத்த படியாகச் சிவபெருமான் இடபக் கொடி யோடு எழுந்தருளுகிறான். தருமமே இடபமாக இருத்தலின் அது வெள்ளை வெளேரென்றிருக்கிறது. உலகில் அவனை எல்லோரும் புகழ்கிறார்கள். வீரம் நிரம்பிய செறிந்த தோள்களை உடையவன். உமாதேவியார் விரும்பி அமரும் பாங்கை உடையவன். இமையாத மூன்று கண்களை உடையவன். மூன்று மதில்களை அழித்த பெருவலியையுடைய செல்வன் அவன். அவனும் எழுந்தருளுகிறான்.

அதோ கடைசியில் இந்திரன் வருகிறான். ஆயிரம் விழிகளையுடைய இந்திரன்தான். நூறு வேள்விகளை நிறைவேற்றிச் சதமகன் என்ற திருநாமம் படைத்தவன் அவன். பகைவர்களை வென்ற வெற்றியை உடையவன். நான்கு கொம்புகளோடு ஒய்யாரமாக நடைபோட்டுக் கொண்டு தன் நீண்ட பெரிய வளைந்த துதிக்கையை மேலே தூக்கிக் கொண்டு வரும் ஐராவதத்தின் பிடரியின் மேல் ஏறி அமர்பவன், அந்தப் பெரும் பதவி பெற்ற செல்வன்,

இப்படி, புள்ளனி நீள் கொடிச் செல்வன், மூவெயில் முருக்கிய செல்வன், யானை எருத்தம் ஏறிய செல்வன் ஆகிய மூன்று செல் வரும் முருகனைக் காண வரு கின்றனர்.

கடுவொடு ஒடுங்கிய தூம்புடை வாலெயிற்று அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறற் பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் புள்அணி நீள்கொடிச் செல்வனும், வெள்ஏறு வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள் உமைஅமர்ந்து விளங்கும் இமையா முக்கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/109&oldid=643723" இலிருந்து மீள்விக்கப்பட்டது