பக்கம்:வழிகாட்டி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 வழிகாட்டி

மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும், நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறுபல் வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடைத் தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும், (விஷத்தோடே உறைக்குள்ளே கிடந்த துவாரத்தை யுடைய வெள்ளிய பற்களையும், நெருப்பைப் போல மூச்செறியும் பயங்கரமான மிக்க வலிமையையும் உடைய பாம்பு இறக்கும்படியாக அடிக்கும் பல கோடு களையுடைய வளைந்த சிறகைப் பெற்ற கருடனை அணிந்த உயர்ந்த கொடியை உடைய திருமாலும், வெள்ளிய இடபத்தை வலப்பக்கத்தே துவசமாகத் தூக்கியவனும் பலர் புகழும் திண்ணிய தோளை உடை யவனும் உமாதேவியார் ஒரு பாகத்தே தங்கி விளங்கு பவனும் திரிபுரத்தை அழித்த வலிமை மிக்கவனுமாகிய சிவபிரானும், ஆயிரங்கண்களையும் நூறாகிய பல வேள்விகளை முடித்து அவற்றினிடையே வரும் பகையை வென்று கொன்ற வெற்றியையும் உடைய வனும் நான்காக உயர்ந்த கொம்பும் அழகிய நடையும் உடையதும் தாழ்ந்த பெரிய வளைந்த கையை உயர்த்தி யதுமாகிய ஐராவதத்தின் பிடரியிலே ஏறிய ஐசுவரியம் மிக்கவனுமாகிய இந்திரனும்.

கடு-விஷம். தூம்பு-துவாரம். எயில்-மதில். முருக் கிய-அழித்த முரண்-வலிமை. நாட்டம்-கண். கொற்றம்வெற்றி. எருத்தம்-கழுத்து.)

இந்த மூன்று பேரும் எதற்காக வருகிறார்கள்? உலகம் நன்றாக நடைபெற்று மும்மூர்த்திகளுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/110&oldid=643725" இலிருந்து மீள்விக்கப்பட்டது