பக்கம்:வழிகாட்டி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாவினன்குடி iOS

இடையீடில்லாத வேலை இருக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு வருகிறார்களாம். தன்னை மதியாது சென்ற பிரம தேவனைப் பிரணவப் பொருள் உரைக்கும் படியாக ஏவிய பொழுது, அவன் அறியாது விழிக்கவே, அவனை முருகன் குட்டிச் சிறையிட்டுவிட்டான். சிருஷ்டித் தொழிலைச் செய்யும் அவனைச் சிறையில் அடைக் கவே, அவன் தொழில் தடைப்பட்டது. சிருஷ்டி, ஸ்திதி, சங்காரம் என்னும் மூன்று தொழிலும் ஒன்றனோடு ஒன்று தொடர்புடையன. சிருஷ்டித் தொழில் இல்லை யாகவே ஏனைய இரண்டும் நடக்க முடியாமல் போயின. உலக சிருஷ்டி இருந்தால்தான் மற்றத் தொழில்களுக்கு இடமுண்டு. மக்களினம் மல்கினால் தேவரினம் அவியுணவு பெற்று வாழும். ஆகவே அடிப் படைத் தொழிலாகிய சிருஷ்டியைச் செய்பவன் சிறைப் படவே எல்லோருடைய வாழ்வும் தடைப்பட்டது. அமர லோகமே தம்பித்துவிட்டது. இந்த நிலையை நீக்க வேண்டுமே! பிரமவிஷ்ணு ருத்திரராகிய மூவரும் முத் தொழிலுடையார்; இந்திரன் அமர லோகாதிபதி. இந் நால்வரும் தேவலோகத்துத் தலைவர்கள். அவர்களுள் ஒருவன் சிறைப்படவே ஏனை மூவரும் தலைமை பூண்டு நின்று தேவர்களின் இடுக்கண்களைப் போக்க முந்துகிறார்கள். பிரமனைச் சிறை யிட்ட பிள்ளைப் பெருமானுடைய முனிவைத் தீர்த்து, வரம் வேண்ட வருகிறார்கள். அதனால்தான் தாமே முன்பு செல்லாமல் அடியார்களாகிய முனிவரை முன்னிட்டுக் கொண்டு இசைபாடும் கந்தருவரைத் துணையாக அழைத்து வரு கிறார்கள்.

இந்த உலகத்தின் நாற்றிசையிலும் நான்கு தேவர் கள் நின்று பாதுகாக்கிறார்கள். கிழக்கிலே இந்திரனும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/111&oldid=643727" இலிருந்து மீள்விக்கப்பட்டது