பக்கம்:வழிகாட்டி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாவினன்குடி 111

நான்முகனைக் குறித்து அவர்கள் வந்திருக்கிறார்கள். நான்முகன் பெயரைச் சொல்லிக்கொண்டு வந்தாலும் அவர்கள் நோக்கம், இழந்த தம் பதவிகள் மீட்டும் தமக்குக் கிடைக்க வேண்டும் என்பதுதான்.

ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றித் தாமரை பயந்த தாவில் ஊழி நான்முக ஒருவற் சுட்டிக் காண்வரை. (இன்பத்தை மிகுதியாக உடைய பூவுலகத்திலே தோன்றித் தாமரையினாற் பெறப்பெற்றவனும் கேடில் லாத பல ஊழிக்காலத்தை ஆயுளாக உடையவனும் நான்முகனுமாகிய ஒருவனைக் குறித்து - (மேலே சொன்ன, மூவரும் தன்னை வந்து தரிசனம் செய்ய, முருகன் ஆவினன்குடியில் எழுந்தருளியிருப்பான் என்று சொல்ல வருகிறார்.)

ஏம் - இன்பம். ஊழி - யுகம்.) நான்முகனைச் சிறையிட்ட காலத்தில் தேவர்கள் திருவாவினன்குடிக்கு வந்து அவனை விடவேண்டு மென்று வேண்டினார்களென்பது ஒரு வரலாறு.

நச்சினார்க்கினியர் இங்கே உரை எழுதுகையில் வேறொரு பழங்கதையை எழுதியிருக்கிறார், அது வருமாறு: -

முருகன் சூரனையும் பிற அவுனர்களையும் அழித்துத் தேவர்களுக்கு அமர லோகத்தைப் பழைய படியே உரிமை ஆக்கினான். இந்த நன்றியறிவு மீதுர இந்திரன் தன் மகளாகிய தெய்வ யானையை முருக னுக்கு மணம் செய்து கொடுத்தான். அப்போது முரு கன் தன் வேலை நோக்கி, 'நமக்கு இந்தப் பெருமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/113&oldid=643733" இலிருந்து மீள்விக்கப்பட்டது