பக்கம்:வழிகாட்டி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

if 2 வழிகாட்டி

யையும் இந்த மங்கையையும் தந்தது இந்த வேல்: என்று திருவாய் மலர்ந்தருளினான். அப்போது அருகில் இருந்த பிரமன், 'அந்த வேலுக்கு ஆற்றல் என்னாலல் லவா வந்தது?" என்று தருக்குற்றுச் சொன்னான். முருகன் அது கேட்டு, 'நம்முடைய கையில் உள்ள வேலுக்கு நீதான் சக்தியைத் தரவேண்டுமோ? அட முட்டாளே!' என்று கோபித்து, 'இப்படி அகங்காரங் கொண்டு பிதற்றியதால் நீ பூவுலகிலே சென்று பிறப்பா யாக" என்று சாபம் இட்டான். பிரமன் அவ்வாறே பூவுலகத்திலே பிறந்து மயக்கமுற்றான். அதனை அறிந்தே திருமால் முதலியவர்கள் திருவாவினன் குடிக்கு வந்து முருகனிடம் சாபத்தைப் போக்க வேண்டுமென்று முறையிட்டார்களாம்.

வானுலகத்துப் பெருந்தலைவர்கள் தமக்கெல்லாம் நன்மை உண்டாகும் பொருட்டுப் பூவுலகத்துக்கு வந்து திருவாவினன்குடியை அடைந்து முருகனைத் தரிசித் தார்கள் என்றால், மற்றக் குட்டித் தேவர்களெல்லாம் சும்மா இருப்பார்களா? கோமகன் எப்படியோ அப் படியே குடிமக்களும் செய்வார்கள் அல்லவா? அவர் களும் புறப்பட்டு விட்டார்கள்.

சுடர் வீசும் மேனி படைத்தமையால்தான் தேவர் என்ற பெயர் அவர்களுக்கு வந்தது. சூரியனைப்போலத் தோன்றும் தோற்றத்தோடு அவர்கள் வருகிறார்கள்.

ஏகாதச ருத்திரர், துவாதசஆதித்தர், அஷ்டவசுக்கள், அசுவினி தேவர் இருவர் ஆகிய வேறு பிரிவினராகிய முப்பத்து மூவரும் வருகிறார்கள். அவர்களையல்லாமல் வேறு தேவர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், கிம் புருஷர், யட்சர், வித்தியாதரர், ராட்சர், கந்தர்வர், சித்தர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/114&oldid=643735" இலிருந்து மீள்விக்கப்பட்டது