பக்கம்:வழிகாட்டி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாவினன்குடி 113

சாரணர், பூதர், பைசாசர், தாராகணம், நாகர், ஆகாச வாசிகள், போகபூமியோர் என்னும் பதினெண் கணத் தினரும் வருகிறார்கள். இவ்வளவு பேரும் சேர்ந்தால் கூட்டத்துக்குச் சொல்ல வேண்டுமா? எங்கே பார்த் தாலும் நட்சத்திரங்களைப் போல் அவர்கள் மின்னு கிறார்கள். வெகு வேகமாகக் காற்றைப்போல வருகிறார் கள். காற்றினாலே மூண்ட அக்கினிக்கு எவ்வளவு சக்தி உண்டோ அவ்வளவு ஆற்றல் உடையவர்கள் அவர்கள். நெருப்பைக் கக்கி இடி இடித்தாற்போன்ற முழக்கத்தை உடையவர்கள். முருகனிடத்திலே சமர்ப்பிக்கும் மேலான வேண்டுகோளினால் கிடைக்கும் பாக்கியங் களுள், தாங்கள் பெறுவதற்குரிய பங்கைக் கொள்ளும் பொருட்டு ஆகாசமே வழியாகச் சுழன்று வருகிறார்கள். வந்து தம் தலைவர் தரிசனம் செய்த பிறகு தாம் ஒருங்கே கண்டு இன்புறுகிறார்கள்.

இவ்வாறு முனிவரும் தேவரும் பிறரும் கண்டு வழிபட்டுத் தங்கள் குறைகளை விண்ணப்பித்துக் கொள்ளும்படியாக முருகன் குற்றமில்லாத கற்புமணப் பிராட்டியாகிய தேவயானையோடு சிலகாலம் ஆவினன் குடியிலே தங்கியிருப்பான்.

பகலில் தோன்றும் இகல்இல் காட்சி நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர் மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு வளிகிளர்ந் தன்ன செலவினர் வளியிடைத் தீஎழுந்த தன்ன திறலினர் தீப்பட உரும்இடித் தன்ன குரலினர் விழுமிய உறுகுறை மருங்கில்தம் பெறுமுறை கொண்மார் அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்

வ.க.-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/115&oldid=643739" இலிருந்து மீள்விக்கப்பட்டது