பக்கம்:வழிகாட்டி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 வழிகாட்டி

தாவில் கொள்கை மடந்தையொடு சின்னாள் ஆவி னன்குடி அசைதலும் உரியன்; அதாஅன்று. (சூரியனைப் போலத் தோன்றும் மாறுபாடில்லாத தோற்றத்தையும் நான்காக வேறுபட்ட இயல்பினையும் உடைய முப்பத்து மூவரும், பதினெண் கணத்தினராகிய உயர் பதவியைப் பெற்றவர்களும் விண்மீன்கள் தோன்றினாற் போன்ற தோற்றத்தை உடையவர்களாய், நட்சத்திர மண்டலத்தையும் தாக்கிக் காற்று எழுந்தாற் போன்ற வேகமான நடையை உடையவர்களாய், காற்றிடத்தே நெருப்பு எழுந்தாற் போன்ற வலிமையை உடையவர்களாய், நெருப்பு உண்டாகும்படி இடி இடித் தாற்போன்ற குரலை உடையவர்களாய், மேலானதாகிய தமக்குற்ற வேண்டுகோளினால் தாம் பெறுதற்குரிய முறைமையினைக் கொள்ளும்பொருட்டு, ஆகாயத்தே சுழற்சி உடையவர்களாய் வந்து ஒருங்கே தரிசிக்க, கேடில்லாத கற்பையுடைய மடந்தையாகிய தெய்வ யானையுடன் சிலகாலம் ஆவினன்குடியிலே இருத்த லும் உரிமையாக உடையவன்; அதுமட்டுமன்று,

பகல் - சூரியன். இகல் - மாறுபாடு. பெறீஇயர் - பெற்றவர். மீன் - நட்சத்திரம். சேர்பு - சேர்ந்து. வளி - காற்று. செலவு - செல்லுதல். உரும் - இடி. விழுமிய - மேலான குறை - வேண்டு கோள். கொண்மார் - கொள்ளும் பொருட்டு. தா - கேடு. கொள்கை - கற்பு. அசைதல் - தங்குதல்.)

திருவாவினன்குடியென்பது இப்பொழுது பழனி யைச் சார்ந்து விளங்குகின்றது. பழனிமலை மேல் தண்டபாணி கோயில் கொண்டிருக்கிறார். கீழே தனியே ஒரு திருக்கோயில் உண்டு. அதையே ஆவினன்குடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/116&oldid=643741" இலிருந்து மீள்விக்கப்பட்டது