பக்கம்:வழிகாட்டி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாவினன்குடி 115

என்பர். திருவாகிய லட்சுமியும் ஆவாகிய காமதேனுவும் இனனாகிய சூரியனும் பூசித்தமையால் திருவாவினன் குடி என்னும் பெயர் வந்ததாகப் புராணம் கூறும். ஆனால், பழைய வரலாறுகளைக் கொண்டு ஆராயும் போது, ஆவியர் என்ற குலத்தினருக்குரிய தலைநகராக இவ்வூர் இருந்திருக்க வேண்டுமென்று தோற்றுகிறது. ஆவிநன்குடியென்ற பழம்பெயர் பிறகு ஆவினன் குடியென மாறியிருக்கலாம். மயிலுக்குப் போர்வை யளித்த வள்ளலாகிய பேகனென்பவன் இந்த ஆவியர் குலத்திற் பிறந்தவன். "ஆவியர் கோ' என்று புலவர்கள் அவனைப் பாராட்டுவார்கள். மலை யின் பெயர் பொதினியென்றும், ஊரின் பெயர் ஆவினன்குடி யென்றும் பழங்காலத்தில் வழங்கின.

நச்சினார்க்கினியர், 'இனிச் சித்தன் வாழ்வென்று சொல்லுகின்ற ஊர் முற்காலத்து ஆவினன் குடியென்று பெயர் பெற்றதென்றுமாம்' என எழுதுவர். ஒளவை யார், 'சித்தன் வாழ்வு இல்லந் தொறும் மூன்றெரி யுடைத்து' என்று பாடியதை மேற்கோள் காட்டிச் சித்த னென்பது முருகனுக்குரிய பெயர்களில் ஒன்று என்றும் அவர் எழுதுவர். பழனிக்குச் சித்தன் வாழ்வென்ற பெயர் முன்பு வழங்கியது போலும் போகர் என்ற சித்தர் அங்கே இன்னும் வாழ்கிறாரென்பது ஒரு கர்ண பரம்பரைச் செய்தி. போகர் சமாதி அங்கே உள்ளது என்றும் கூறுவர்.

இயற்கையெழில் படைத்த திருப்பரங்குன்றமும் ஆறுமுகப் பிரான் வந்திருக்கும் திருச்சீரலை வாயும் தேவர் வரம்வேண்டும் பிரானான முருகன் எழுந்தருளி யிருக்கும் திருவாவினன்குடியும் முருகனுக்குரிய படை வீடுகளென்று கூறி, மேலும் கூறப் புகுகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/117&oldid=643744" இலிருந்து மீள்விக்கப்பட்டது