பக்கம்:வழிகாட்டி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம்

அந்தண அடியார்

அடுத்த படைவீடாகிய திருவேரகம் அந்தண அடியார்கள் முருகனை வழிபடுவதற்கு இடமாக விளங்குகிறது. அவ்வந்தணர்கள் குலத்தாலும் ஒழுக்கத் தாலும் சிறந்தவர்கள். -

அவர்கள் வேதம் ஒதுதல், ஒது வித்தல், ஈதல், ஏற்றல், வேள்வி செய்தல், செய்வித்தல் என்னும் ஆறு காரியங்களைச் செய்யும் முறைமையினின்றும் வழுவாதவர்கள். தாயின் வழி, தந்தையின் வழி என்று இருவரையும் சுட்டிய கோத்திரங்களையுடைய பல வேறு பழைய குடிப்பிறந்தவர்கள். நாற்பத் தெட்டு ஆண்டுகள் பிரமசரிய விரதத்தை அநுஷ்டிக்க வேண்டியது உத்தம அந்தணர் கடமை. அப்படி அந்த நல்ல இளமைக் காலத்தை முறைப்படியே கழித்த வர்கள், எப்போதும் தர்மத்தையே சொல்லும் விரதம் பூண்டவர்கள். ஆகவனியம், தகூஷினாக்கினி, காருகபத் தியம் என்ற மூன்று அக்கினிகளை ஒம்பும் இயல்புடை யவர்கள். இந்த அக்கினி காரியங்களைச் செய்வதனால் உலகத்தில் மழை மிக்கு வறுமையின்றி இன்பம் பெருகும், ஆதலின் எல்லாச் செல்வங்களுக்கும் காரண மான அத்தீயையே செல்வமாகப் பெற்றவர்கள் அவர்கள். உபநயனத்திற்குப் பிறகு வேறு ஒரு பிறப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/118&oldid=643746" இலிருந்து மீள்விக்கப்பட்டது