பக்கம்:வழிகாட்டி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேர்கம் 117

எடுத்ததாகக் கருதுவர். ஆதலின் அவர்களை இருபிறப் பாளர் என்று கூறுவர். அவ்வந்தணர் தக்க பொழுது அறிந்து முருகனை வேதத்தாலும் பிற தோத்திரங் களாலும் துதிக்கின்றனர்.

அவர்கள் அணிந்த பூணுரல் மூன்று புரிகளை உடையது; நுண்ணியது. ஒவ்வொரு புரியும் ஒன்பது நுண்ணுல்களால் அமைந்தது. அவர்கள் நீராடிவிட்டு ஈர ஆடையை உலர்த்தாமல் கட்டிக்கொள்கிறார்கள். உடம் பிலே கிடந்தபடியே அது உலர்கிறது. தலைமேலே கைகளைக் குவித்திருக்கிறார்கள். ஆறு எழுத்துக்களை உடைய ஷடrர மந்திர உபதேசம் பெற்றவர்கள் அவர்கள். அந்த மந்திரத்தை உரக்கச் சொல்லாமல் நாக்கு அசைகிற அளவில் பலமுறை உச்சரிக்கிறார்கள். மந்திரங்களை உச்சரிக்கும் முறை அது. அப்படி உச்சரித்துக் கொண்டு வாசனைமிக்க மலர்களை எடுத்து வழிபடுகிறார்கள். கையிலே மலரை வைத்துக் கொண்டு மந்திரம் கூறிப்பின் இறைவன்மேல் தூவுவதை மந்திர புஷ்பம் என்பார்கள்.

இந்த வழிபாட்டினால் மிகவும் மகிழ்ந்து திருவேர கம் என்னும் தலத்திலே எழுந்தருளியிருப்பான் முருகன்.

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண். புலராக் காழகம் புலர உடீஇ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/119&oldid=643748" இலிருந்து மீள்விக்கப்பட்டது