பக்கம்:வழிகாட்டி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 வழிகாட்டி

உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி நாஇயல் மருங்கின் நவிலப் பாடி விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுஉவந்து ஏரகத்து உறைதலும் உரியன்; அதாஅன்று. (ஆறு தொழில்களென்று அமைந்த இலக்கணத்தி னின்றும் பிறழாமல் தாய் தந்தையென்றும் இருவரைச் சுட்டிய பல்வேறு பழைய கோத்திரத்தை உடையவர் களும், நாற்பத்தெட்டாகிய இளமைப் பருவத்துக்குரிய நல்ல ஆண்டுகளை நிற்க வேண்டிய நெறியிலே நின்று கழித்தவர்களும், தர்மத்தையே சொல்லிக் கொண் டிருக்கும் விரதத்தை உடையவர்களும், மூன்று வகை யாகச் சொல்லப்பட்ட மூன்று வேள்வித் தீயையே செல்வமாக உடைய இருபிறப்பாளர்களும் ஆகிய அந்தணர், முருகனைத் துதிக்கும் சமயம் அறிந்து தோத் திரம் கூறவும், ஒன்பது நூலை முறுக்கிய மூன்று புரிகளாகிய நுண்ணிய பூணுலை அணிந்து, உலராத ஈர ஆடையைக் கிடந்தவாறே உலரும்படியாக உடுத்து, தலைமேலே குவித்த கைகளை உடையவர்களாய் முருகனைப் புகழ்ந்து, ஆறெழுத்துக்களைத் தன்பாற் கொண்ட அரிய உபதேச மந்திரத்தை நாக்கானது புரளும் மாத்திரத்திலேயே பலமுறை கூறி, மணம்மிக்க நறுமலர்களை ஏந்தி (வழிபடவும்) அதற்கு மிகவும் மகிழ்ந்து திருவேரகத்திலே எழுந்தருளியிருப்பதற்கும் உரியவன்; அது மாத்திரம் அன்று.

ஆறினில் - தக்க வழியிலே. கழிப்பிய - கழித்த, காழகம் - ஆடை மறை - மந்திரம்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/120&oldid=643750" இலிருந்து மீள்விக்கப்பட்டது