பக்கம்:வழிகாட்டி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம் 119

அந்தணர் மலர் ஏந்தி முருகன் திருநாமத்தை ஜபித்து தோத்திரங்களையும் வேதமந்திரங்களையும் கூறி வழிபடுகின்றனர். -

திருவேரகம் என்பது மலைநாட்டில் உள்ள தலம் என்று நச்சினார்க்கினியர் கூறுவர். சுப்பிரமணியம் என்ற தலம் மலைநாட்டில் உண்டு. அதனை அவர் கருதினார் போலும்! ஆனால் அருணகிரிநாதர் முதலிய பெரி யோர்கள் சோழ நாட்டில் காவேரிக் கரையில் உள்ள சுவாமி மலையையே திருவேரகமென்று பாடியிருக் கிறார்கள்.

- - - - - - - - காவிரியாற்றுக்கு ளேவரு

வளமைச் சோழநன் னாட்டுக்குள் ஏரக

நகரிற் சீர்பெறு மோட்சத்தை யேதரு பெருமாளே

என்பது திருப்புகழ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/121&oldid=643753" இலிருந்து மீள்விக்கப்பட்டது