பக்கம்:வழிகாட்டி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றுதோறாடல்

வேலன் கட்டிய கண்ணி

முருகன் குறிஞ்சித்திணைத் தலைவன். "சேயோன் மேய மைவரை உலகமும்’ என்று தொல்காப்பியம் சொல்கிறது. மலையும் மலையைச் சார்ந்த இடங்களும் குறிஞ்சி ஆகும். அதற்கு தெய்வம் முருகன். எனவே, கோயில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், வேறு தெய் வங்களுக்கு உரிய கோயில்கள் இருந்தாலும், மலைகள் எல்லாவற்றிலும் முருகன் கோயில் கொண்டிருக்கிறான் என்பது தமிழர் கொள்கை. எல்லாக் குன்றுகளிலும் அவன் எழுந்தருளி இருப்பதற்கு அறிகுறியாக எல்லா மலைகளையும் ஒரே தொகுதியாக வைத்து அவற்றைக் குன்றுதோறாடல் என்ற பெயரால் இக்காலத்தில் குறிப் பார்கள். முருகன் படைவீடுகள் ஆறில் குன்றுதோறாட லாகிய தொகைத்தலமும் ஒன்று.

மலைகளில் முருகனைக் குறவர்கள் வழிபடு வார்கள். முருகனைப் பூசிக்கும் பூசாரி அங்கே இருக் கிறான். அவன் தெய்வ ஆவேசம் வந்து ஆடுவான். அதனால் அவனுக்கு வேலன் என்ற பெயர் வழங்கும். அவன் முருகனது விக்கிரகத்துக்கு அபிஷேகம் ஆராதனை முதலியன செய்வான். விக்கிரகத்தைப் படிமம் என்று சொல் வார்கள். அதைப் பாதுகாப் பதனால் பூசாரிக்குப் படிமத்தான் என்ற பெயரும் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/122&oldid=643756" இலிருந்து மீள்விக்கப்பட்டது