பக்கம்:வழிகாட்டி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றுதோறாடல் 121

பூசாரி பூசை போடுவான். அப்பொழுது குறவர்க ளெல்லாம் களிக்கூத்தாடுவார்கள்; கையைக் கோத்துக் கொண்டு குரவை ஆடுவார்கள். குன்றில் உள்ளவர்கள் ஆடும் குரவைக்கூத்தாதலால் அதற்குக் குன்றக் குரவை யென்ற பெயர் வந்தது. அவர்களுடைய வழிபாட்டைக் கண்டு மகிழ்ந்து முருகன் பிரசன்னமாவான். குரவை யோடும் குறவர் கூட்டத்தின் முன்னர், தானும் தேவ மகளி ரொடு கைகோத்துக் கொண்டு கூத்தாடிக் கொண்டே எழுந்தருளுவான்.

குன்றுதோறாடலில் முருகன் இவ்வாறு வெளிப் படுவதை நக்கீரர் எடுத்து விரிவாகச் சொல்கிறார்.

வேலனாகிய பூசாரி முருகனுக்காகச் சிறப்பான கண்ணி ஒன்றைக் கட்டியிருக்கிறான். மலர்களை வைத்துக் கட்டியதோடு, வாசனை தரும் இலை களையும் காய்களையுங்கூடச் சேர்த்துக் கட்டியிருக் கிறான். பச்சிலையென்ற கொடியினாலே சாதிக்காயை நடுவே வைத்துப் புட்டிலைப் போலத் தோற்றுகின்ற தக்கோலத்தின் காயையும் வைத்துத் தொடுத்திருக் கிறான். அப்படித் தொடுத்துத் தலையில் அணிவதாகிய கண்ணியை முருகன் அன்போடு சூடிக்கொள்கிறான். தன்னை இடையறாமல் வழிபடும் வேலனது அன்பை ஏற்றுக் கொண்டு முதலில் அந்தக் கண்ணியைத் தலை யிலே அணிந்துகொள்கிறான்.

பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் அம்பொதிப் புட்டிடல விதைஇக் குளவியொடு வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன். (பச்சிலைக் கொடியால் நல்ல மணத்தையுடைய சாதிக்காயை நடுவிலே வைத்து, பூசாரியானவன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/123&oldid=643758" இலிருந்து மீள்விக்கப்பட்டது