பக்கம்:வழிகாட்டி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 வழிகாட்டி

அதனோடு அழகையுடைய பொருளைப் பொதிந்து வைக்கும் புட்டிலைப் போன்ற தக்கோலக் காயையும் கலந்து, காட்டு மல்லிகையுடன் வெண் கூதாளம் பூவையும் தொடுத்துக் கட்டிய கண்ணியை அணிந்த வனாகி - முருகன் வருகிறானென்று சொல்ல வருகிறார்.

நறை - வாசனை. விரைஇ - கலந்து, குளவி -

காட்டு மல்லிகை.)

குன்றக்குரவை

பூசாரியின்மேல் வைத்த அன்பால் அவன் கட்டி யிருந்த கண்ணியை அணிந்து கொண்டு கோயில் வாயிலைப் பார்க்கிறான் முருகன். குறவர்கள் ஆனந்த மாகக் குரவையாடுகிறார்கள். எத்தனை உற்சாகம்! ஒவ்வொருவரும் மார்பு நிறைய நல்ல வாசனையை யுடைய சந்தனத்தைப் பூசிக்கொண்டிருக்கிறார்கள். கொடுமையான காரியங்களைச் செய்பவர்கள் அந்தக் குறவர்கள்; வலிய வில்லைக் கொண்டு விலங்கினங் களையும் பிறரையும் கொலை செய்யும் கானவர்கள். அவர்கள் இப்பொழுது முருகனை நினைத்து அன்பில் ஈடுபட்டு ஆடுகிறார்கள்.

மலைச்சாரலிலே தேனடைகள் மிகுதியாக இருக்கும். அந்தத் தேனை எடுத்து மூங்கிற் குழாயிலே ஊற்றி வைப்பார்கள். நாளாக ஆக அது புளித்துப் போய் வெறியூட்டும் கள்ளாக விளைந்துவிடும். அதை வடி கட்டித் தெளிவாக எடுத்து அந்தக் குறவர்கள் உண்பார் கள். இப்போது அவர்கள் மூங்கிலிலே விளைந்த தேனா லுண்டான கள்ளை உண்டு வெறிபடைத்துக் கூத்தாடு கிறார்கள். மலையிலே அங்கங்கே சிறிய சிறிய ஊர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/124&oldid=643761" இலிருந்து மீள்விக்கப்பட்டது