பக்கம்:வழிகாட்டி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றுதோறாடல் l 123

இருக்கின்றன. அத்தனை ஊர்க்காரர்களும் சுற்றத் தாரோடு வந்து உண்டு மகிழ்ந்து, குறிஞ்சி நிலத்துக்கு உரியதாகிய தொண்டகப் பறையை முழக்கிக்கொண்டு அந்த இசைக்கு ஏற்பக் குரவைக் கூத்தாடுகிறார்கள்.

நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பிற் கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர் நீடமை விளைந்த தேக்கள் தேறல் குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து தொண்டகச் சிறுபறைக் குரவை அயர. (வாசனை வீசும் சந்தனத்தை அணிந்த, நிறம் எடுத்துக்காட்டும் மார்பையும், கொடுமையான செயலையும் உடையவரும், வலிய வில்லால் கொலை புரிகின்ற வருமாகிய கானவர், உயர்ந்த மூங்கிற் குழாயில் முற்றி விளைந்த தேனாலாகிய கள்ளின் தெளிவை மலையில் உள்ள சிற்றுாரில் வாழும் தம் சுற்றத்தாருடன் உண்டு மகிழ்ந்து, தொண்டகம் என்னும் சிறிய பறைக்கு ஏற்பக் குரவைக் கூத்தை ஆட.

கேழ் - நிறம். கொலைஇய - கொன்ற அமை - மூங்கில். தேறல் - தெளிவு. கிளை - சுற்றம்.)

குறவர் ஆடும் குரவைக் கூத்தைக் கண்டுகளிக்கவும், அவர்களுடைய பாடலிலே ஈடுபடவும் முருகன் எழுந் தருள்கிறான்.

முருகன் பேரழகன். அந்த அழகினால் கவரப் பெற்று அவனைச் சூழ நின்று சேவிக்கும் மடமகளிர் பலர் உண்டு. அவன் புகழை இன்னிசையாலே பாடும் அணங்கினர் பலர் உண்டு. அவன் கைகொடுக்கப் பிணைந்து கூத்தாடும் மகளிரும் பலர். இவர்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/125&oldid=643763" இலிருந்து மீள்விக்கப்பட்டது