பக்கம்:வழிகாட்டி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 வழிகாட்டி

குறிஞ்சிநிலத் தலைவனாகிய முருகனுடைய குடிமக் களின் ஆரவாரத்தைக் காண அந்தப் பெருமானோடு வருகிறார்கள்.

சேவிக்கும் மகளிர்

சூழ நின்று முருகனைச் சேவிக்கும் மகளிரைச் சற்றே பார்க்கலாம். சுனைகளிலே தண்மையும் மணமும் செறிந்த நீலோற்பவம் முதலிய பலவகைப் பூக்கள் மலர்கின்றன. குறிஞ்சித் திணையிலே நடக்கும் விழாவைப் பார்க்க வரும் தெய்வ மகளிர் அந்தத் திணையிலுள்ள பூக்களைப் புனைகின்றனர். ஆழமான சுனையிலே வண்டுகள் விரும்பி வந்து மொய்க்கும்படி யாக இருக்கின்றன. அவை. பேரரும்பாக இருக்கும் போதே அவற்றைப் பறித்து விரலாலே வலிய அலர்த்திக் கண்ணியாகக் கட்டி அந்த மங்கையர் தம் தலையில் அணிந்து கொண்டிருக்கின்றனர். இரட்டை இரட்டையாகப் பிணைத்த மாலையைக் கட்டிக் கூந்தலை அலங்காரம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் தலையிலே பூ, மார்பிலே பூ, இடையிலே கூடப் பூ அணியாகவும் ஆடையாகவும் மலர்கள் அவர் களுக்கு உதவுகின்றன. தழையாலும் பூவாலும் அமைத்த ஆடைக்குத் தழையென்று பெயர். குறிஞ்சி. நிலத்துப் பெண்கள் அதனை ஆடையாக உடுப்பது வழக்கம். இந்த மகளிரும் வெண் கடம்பினது பூங் கொத்துக்களையிட்டுக் கட்டிய தழையாடையை, மணி வடங்களை அணிந்த தங்கள் இடையிலே அசையும்படி யாக உடுத்துள்ளனர். மலரும் இலையும் புனைந்து அவர்கள் மெல்ல நடந்து வரும்போது, அதுவும் முருகனோடு வரும்போது, அக்காட்சி மயில்கள் கூட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/126&oldid=643766" இலிருந்து மீள்விக்கப்பட்டது