பக்கம்:வழிகாட்டி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம்


1


சில வகையான பெயர்களைச் சொன்னாலே அந் தப் பெயருடையார் இன்ன நாட்டைச் சேர்ந்தவர் என்று அறிந்துகொள்ளலாம். வேங்கடராமன், முருகன், சுப்பிர மணியன், ராமசாமி, கிருஷ்ணமூர்த்தி என்ற பெயர்கள் தமிழ் நாட்டுக்கே உரியவை. வேங்கடராமர்களும், முருகர்களும், சுப்பிரமணியர்களும் இந்த நாட்டில் கணக்கில்லாமல் உண்டு. வேங்கடத்தில் எழுந்தருளிய திருமாலை முருகனென்றே கூறிச் சாதிப்பார் இருக் கிறார்கள். சுப்பிரமணியன் தமிழ்நாட்டுத் தெய்வம். இன்று முருக வழிபாடு தமிழ்நாட்டில் பரவியிருப்பது போல வேறு எங்கும் இல்லை. அருணகிரிநாதர் பிறந்த திருப்புகழ்ப்பாக்களை அமுதமாரி போலப் பொழிந்த பிறகு முருக வழிபாடு பின்னும் பெருகியது. இன்றும் ஆவேச ரூபத்தில் வந்து அருள் செய்கிறான் முருகன் என்ற நம்பிக்கை பல அடியார்களுக்கு இருக்கிறது. பழநி, திருச்செந்தூர் முதலிய தலங்களில் நிகழும் அற்புத நிகழ்ச்சிகளால் முருகனைக் கண்கண்ட தெய்வ மென்றும் கலியுக வரதனென்றும் போற்றுகிறார்கள் மக்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/13&oldid=644043" இலிருந்து மீள்விக்கப்பட்டது