பக்கம்:வழிகாட்டி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வழிகாட்டி


பழங்காலத்தில் தமிழ் நாட்டில் முருக வழிபாடு எப்படி இருந்தது? இன்று இருப்பது போன்ற முறையில் அமையாவிட்டாலும் நாடெங்கும் பலபல வகையில் அப்பெருமானைப் போற்றிப் பணிந்து தமிழர் வழிபட் டனர். நிலப்பரப்பை ஐந்து வகையாகத் தமிழர் பிரித் தனர். மலையும் மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி யென்றும், காடும் காட்டைச் சார்ந்த இடமும் முல்லை யென்றும், இவ்விரண்டினிடையே கோடையின் வெம்மையால் ஒன்றும் விளையாமல் கிடக்கும் நிலப் பரப்பைப் பாலையென்றும், வயலும் ஊரும் சார்ந்த இடத்தை மருதமென்றும், கடலும் கடலைச் சார்ந்த இடமும் நெய்தலென்றும் வகுத்து, அந்த அந்த நிலப் பகுதியில் வாழும் மக்கள், உள்ள மரம் விலங்கு பறவை ஆகியவற்றை ஆராய்ந்து பாடியிருக்கின்றனர். ஒவ்வொரு நிலத்துக்கும் தெய்வம் இன்னார் என்ற கொள்கையும் பழங்கால முதல் இருந்து வருகிறது. குறிஞ்சிக்கு முருகனும், பாலைக்குத் துர்க்கையும், முல்லைக்குத் திருமாலும், மருதத்துக்கு இந்திரனும், நெய்தலுக்கு வருணனும் தெய்வங்கள்.


இந்த ஐந்து திணைகளுள் இயற்கையிலே முதலில் தோற்றியதாகவும், உயர்ந்ததாகவும் விளங்குவது குறிஞ்சி. உலக முழுவதும் நீரால் மூடியிருக்க, முதலில் நிலப்பரப்புத் தோன்றிய காலத்தில் மண் தோன்றாமல் மலைதான் இருந்தது என்று நில நூல் வல்லார் சொல் கின்றனர். இந்த உண்மையைத் தமிழரும் உணர்ந்திருந் தனர். "எங்கள் மறக்குலம் உலகம் உண்டான நாள் முதலே வாளோடு பிறந்தது" என்று தம் பழமையைச் சொல்ல வந்த வீரன் ஒருவன் அந்தப் பழமையைச் சுட்டிக் காட்ட, 'கல் தோன்றி மண் தோன்றாத அந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/14&oldid=644046" இலிருந்து மீள்விக்கப்பட்டது