பக்கம்:வழிகாட்டி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 13


காலத்திலே நாங்கள் தோன்றினோம்' என்று சொல்லு கிறான்.


"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு


முன்தோன்றி மூத்த குடி.'


(புறப்பொருள் வெண்பா மாலை)


ஆதலின் முதல் திணையாகக் குறிஞ்சியை வைத்த தற்குக் காலப் பழமையும் ஒரு காரணம் என்று தெரி கிறது. அந்த முதல் திணைக்குத் தெய்வமாக முருகனை வைத்துப் போற்றும் மரபு, தமிழருக்கு அக்கடவுளின் பால் உள்ள பேரன்பைப் புலப்படுத்துகிறது. இயற்கை அழகைக் கண்டு இன்புற்று வந்த தமிழருக்குக் கடவுள் பேரழகனாக, மணம் பொருந்தியவனாக, இளையவனாக இருக்கும் கோலமே மிக்க உவப்பை அளிப்பதாயிற்று. வீரமும் காதலும் சிறக்கும் நிலையினால் முருகன் திரு வுருவம் அவர்கள் கருத்தில் கவர்ச்சியைத் தந்தது. அவனை முதல் திணையின் கடவுளாகத் தலைமை இடம் கொடுத்து வழிபட்டனர். அவனுடைய இயல்பு களைப் பலபல வகையிலும் பாராட்டினார். அழகுக்கும் வீரத்துக்கும் இன்பத்துக்கும் இருப்பிடமாகக் கொண்டு போற்றினர். எல்லாப் பொருள்களையும் ஆக்கி அளித் தழிக்கும் ஆற்றலுள்ள கடவுள் யாரோ அவனே முருகன் என்ற கருத்தைக் கொண்டனர். முருகுணர்ச்சியினிடையே பகை இல்லை; வேறுபாடு இல்லை; பிற தெய்வங் களைப் புறக்கணிக்கும் இயல்பு இல்லை. .


முருகனைச் சங்கப் புலவனாகவும், தமிழை மதிப் பிடும் நூலறி புலவனாகவும் சொல்லும் வரலாறுகள் எழுந்தன. சங்கப் புலவர்கள் அவன் புகழைப் பாடினர். கடைச் சங்க காலத்தில் எழுந்த பல நூல்களில் இப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/15&oldid=644048" இலிருந்து மீள்விக்கப்பட்டது