பக்கம்:வழிகாட்டி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 - வழிகாட்டி

போது உருப்படியாகக் கிடைப்பன மூன்று தொகுதிகள். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்ற மூன்று வகையானவை அவை. பத்துப்பாட்டைப் பாட்டென்றும், எட்டுத் தொகையைத் தொகையென்றும் வழங்குவர். 'பாட்டினும் தொகையினும் கீழ்க்கணக் கினும் என்ற முறையில் இவற்றை வரிசைப்படுத்தி வழங்குவது புலவர் சம்பிரதாயம். இந்த மூன்று வகை யிலும் முன்னே நிற்பது பத்துப்பாட்டு என்னும் வரிசை அத்தொகுப்பில் பத்துப் பெரிய பாட்டுக்கள் இருக் கின்றன. அவற்றுள் முதலாவது திருமுருகாற்றுப்படை. கடைச்சங்க நூல்களாகிய முப்பத்தாறில் முதலிலே நிற்பது திருமுருகாற்றுப்படை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். -

ஒவ்வொரு தொகை நூலுக்கும் முதலில் கடவுள் வணக்கத்தை அமைத்திருக்கிறார்கள். பத்துப்பாட் டென்னும் தொகுப்புக்குத் தனியே கடவுள் வணக்கம் அமையவில்லை. ஆனாலும் திருமுருகாற்றுப்படையே பத்துப் பாட்டில் முதற்பாட்டாகவும் அதன் கடவுள் வாழ்த்துப் பாட்டாகவும் நிற்கிறது. முருகனைப் பற்றிய பாட்டை முதலில் வைத்து முப்பத்தாறு நூல்களைத் தொகுத்து வைத்ததனாலும் தமிழ் மக்களுக்கு முருகனிடம் இருந்த பக்தியை உணரலாம்.

திருமுருகாற்றுப்படையை இயற்றியவர் நக்கீரர். மதுரையில் பள்ளிக்கூடத்து ஆசிரியராக இருந்து புகழ் பெற்ற ஒரு புலவருடைய குமாரர் அவர் அந்த ஆசிரி யருடைய பெயர் இன்னதென்று தெரியவில்லை. மிக்க புகழ் பெற்றவர்களுடைய இயற்பெயரை மரியாதை காரணமாக வழங்கமாட்டார்கள். ஐயரவர்கள், பிள்ளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/16&oldid=643569" இலிருந்து மீள்விக்கப்பட்டது