பக்கம்:வழிகாட்டி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் | - 15

யவர்கள், பிரதம மந்திரிய வர்கள் என்பனபோலச் சொல்வது இன்றும் வழக்கமாக உள்ளது. அப்படி வழங்குவதனால் நாளடைவில் அவர்களுடைய இயற் கையான பெயர்கள் மறந்து போவதும் உண்டு. கம்பர் என்பது சாதிப் பெயர்; காளி பூசை செய்யும் உவச்சர் களின் சாதிப் பெயர் அது. கவிச்சக்கரவர்த்தியாகிய கம் பருக்குத் தகப்பனார் இட்ட பெயர், அவர் காலத்தி லேயே வழக்கற்றுப் போயிற்று.கம்பர் என்றே நிலைத் துப் போயிற்று. அப்படித்தான் நக்கீரருடைய தந்தை யாருக்கு உரிய பெயரும் இப்போது தெரியாது. மதுரை வாத்தியார் என்றுதான் தெரியும். 'மதுரைக்கணக்கா யனார்' என்று அவர் பெயர் புத்தகங்களில் காணப்படு கிறது. கணக்காயரென்பது பள்ளிக்கூட உபாத்தியாயருக் குப் பெயர். நல்ல வேளையாக நக்கீரர் பெயர் மறைந்து போகாமல் நிற்கிறது. நக்கீரருக்குக் கொற்றனார் என்ற புதல்வர் ஒருவர் இருந்தார்.

நக்கீரர் அந்தணர்; மதுரையில் வாழ்ந்தவர்; கடைச் சங்கத்தில் இருந்த புலவர்களில் புகழ்பெற்ற சிலருள் ஒருவர். இவர் பாடிய பாடல்கள் பல. தொகை நூல் களில் இவர் பாடல்கள் இருப்பதோடு வேறு சில நூல் களும் இவர் பெயரால் வழங்குகின்றன. ஈங்கோய் , மலை எழுபது, கைலைபாதி காளத்திபாதி அந்தாதி, கோபப் பிரசாதம் முதலிய ஒன்பது பிரபந்தங்கள் நக்கீர தேவ நாயனார் இயற்றியனவாகச் சைவத் திருமுறை களில் ஒன்றாகிய பதினோராந் திருமுறையிலிருந்து தெரிய வருகிறது. இந்த நக்கீர தேவரும் சங்கப் புலவ ராகிய நக்கீரரும் ஒருவரேயென்று கூறி, அதற்கு ஆதார மாகப் புராணக் கதைகளைக் காட்டுவர் சிலர். ஆராய்ச் சிக் காரர்கள் நடை, பொருள் முதலியவற்றின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/17&oldid=643570" இலிருந்து மீள்விக்கப்பட்டது