பக்கம்:வழிகாட்டி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 வழிகாட்டி

அமைப்பைக் கொண்டு இருவரும் வேறு என்று சொல் வார்கள்.

திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டில் சேர்ந்திருப் பதால், அது சங்ககாலத்து நக்கீரரால் இயற்றப்பெற்ற தென்றே கொள்ள வேண்டும். அதைப் பதினோராந் திரு முறையிலும் சேர்த்திருக்கிறார்கள் சைவர்கள். இலக்கிய வகையில் பத்துப்பாட்டிலும், தோத்திர வகையில் பதி னோராந் திருமுறையிலும் சேர்ந்துள்ளமையால் இந்த நூல் இரட்டிப்பு மதிப்புடையது. முருகாற்றுப்படையாக இருந்த இது, திரு முறையிலே சேர்ந்து பாராயண நூலான பிறகு, திருமுருகாற்றுப்படை ஆகிவிட்டது. இதனைப் பாராயணம் செய்த முருகம்மையார் என்ப வருக்கு முருகன் தரிசனம் தந்தருளினான் என்று ஒரு கதை வழங்கிவருகிறது. இன்றும் முருகனடியார் பலர் இதனை மந்திரம்போல ஓதிப் பயன்பெறுகின்றனர்.

2.

ஒரு கருத்தை நேரடியாகச் சொல்வது காரியத்திலே குறியாக இருப்பவர்கள் இயல்பு. காரியத்தோடுகூட, அதைப்பற்றிச் சொல்வதிலும் நயம் உண்டாகும்படிச் சொல்வது சிலர் இயல்பு. 'கடைக்குப் போய்ப் பழம் வாங்கி வா" என்று ஒரு சிறுவனைப் பார்த்து நேரே சொல்லலாம். அதில் காரியம் மாத்திரம் இருக்கிறது. “மரத்தில் இருக்கிற பழம் கடைக்கு வந்திருக்கிறது கடைக்காரன் மனசு வைத்ததனால், அந்தப் பழம் என் கைக்கு வரும், நீ மனசு வைத்தால்" என்று பையனைப் பார்த்துச் சொன்னால், அதில் காரியம் இருக்கிறது, சாதுரி யமும் இருக்கிறது. அந்தப் பையனைப் பார்த்தே சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/18&oldid=643571" இலிருந்து மீள்விக்கப்பட்டது