பக்கம்:வழிகாட்டி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 17

லாமல் வேறு ஒருவரிடம் சொல்வதுபோல், 'நேற்று இவன் செய்த காரியத்தைக் கேட்டீர்களா? கடிதம் எழுத வேண்டுமென்று பேசிக் கொண்டே இருந்தேன்; பேச்சை முடிப்பதற்குள் என் கையில் கார்டு வந்து நிற் கிறது. எல்லாம் இவன் வேலை. இப்போது எனக்குப் பழம் வேண்டும்; கடையில் இருக்கிற பழம் வேண்டும்; கடையில், இருப்பது என்ன? கற்பக விருட்சத்தில்தான் இருக்கட்டுமே! பிரமாதமா?' என்று சொல்லுகிறோம். இதுவும் முன்னே சொன்ன இரண்டு வகையான பேச் சிலே உள்ள காரியத்தைக் குறித்ததுதான். ஆனாலும் காரியத்தைக் காட்டிலும் பேச்சு இனிக்கிறது. விஷ யத்தைச் சுற்றி வளைத்துச் சொன்னாலும் கேட்பவர் எளி திலே உணர்ந்து கொள்கிறார். கருத்தைச் சொல்பவரது கருத்தைக் காட்டிலும் கருத்தைக் குறிப்பாக உணர வைக்கும் தோரணையிலே இன்பம் காணுகிறார்.

கவிஞர் தம் கவிகளில் சொல்லும் விஷயத்தை நேரடியாகச் சொல்லாமல் குறிப்பாகச் சொல்கின்றனர். அந்தக் குறிப்பானது கவியை வாசிப்பவர் உள்ளத்துக்குத் தெளிவாக புலனாகிறது. பொருளை நேராகச் சொல்லா மல் வளைத்துச் சொல்வதனாலே சுவை உண்டாகிறது. அப்போதுதான் கருத்துக்கு உள்ள கெளரவம், அதை வெளிப்படுத்தும் சொல்லுக்கு உண்டாகிறது. விஷ யத்தை விளக்கப் பலபல சுவையான பாணிகளைக் கவிஞர்கள் மேற்கொள்கிறார்கள். அந்தப் பாணி களையே அலங்காரமென்றும், ரசமென்றும் சொல்வார் கள். நுண்ணியதாக இருக்கிற கருத்தானது கவிஞன்தன் கற்பனையினால் பின்னிய அழகிய பாணிகளினூடே வளைந்து நெகிழ்ந்து விரிந்து சுவை ததும்ப நிற்கிறது. ஒரு கருத்தே பல பாடல்களாக உருவெடுக்கிறது. ஒரு

ഖ.ക.--2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/19&oldid=643572" இலிருந்து மீள்விக்கப்பட்டது