பக்கம்:வழிகாட்டி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வழிகாட்டி

தலைமையான கருத்தே நூற்றுக்கணக்கான, ஆயிரக் கணக்கான பாடல்களையுடைய காவியமாகப் பரிணமிக் கிறது. காசிக்குப் போனான்; காவடி கொண்டு வந்தான் என்று உப்புச் சப்பில்லாமல் சாமான்ய மனிதன் சொல் வதையே, ரசமான சொற் குவைகளாலே, சுவைமிக்க பாணிகளாலே கதையாக்கிக் காட்சியாக்கி நிகழ்ச்சி களையும் வருணனைகளையும் படைத்துப் பெரிய காவியமாக முடிக்கிறான் கவிஞன்.

ஒருவனைப் புகழ வேண்டுமானால், 'நீ மிகவும் நல்ல வன்; சிறந்த அறிவாளி' என்று நாலைந்து வார்த்தைகளிலே சொல்லி முடித்துவிடலாம். அப்படிச் செய்வது எல்லோருக்கும் எளிது. அந்தப் புகழுக்குப் பலபல உருவம் கொடுத்து, புகழப்படுவோன் மாத்திர மின்றிப் பிறரும், சொல்லும் தோரணையின் அழகுக் காகக் கவனிக்கும்படியாகச் செய்கிறான் கவிஞன். ஒரு வனையே பல புலவர் புகழ்ந்திருக்கலாம். ஒரு புலவரே பலமுறை அவனைப் புகழ்ந்திருக்கலாம். அவற்றில் தனித்தனியே வேறு வேறு ரசம் இருக்கும். முருகன் புகழைப் பல புலவர்கள் பாடியிருக்கிறார்கள். திருமுரு காற்றுப்படை முருகனைப் புகழும் கவியுருவங்களில் ஒன்று. இதில் மற்றக் கவிகளில் உள்ள முருகன் இருக் கிறான்; அவன் பெருமையும் இருக்கிறது. ஆனாலும் இது புதுமைச் சுவையோடு பொலிகிறது. பிறர் சொல் லாத முறையில், நக்கீரரே வேறு பாடல்களில் மேற் கொள்ளாத பாணியில் இந்த ஆற்றுப்படை செல்கிறது.

புலவர்கள் படைத்த அழகுருவங்களிலே ஆற்றுப் படை ஒன்று. ஒரு செல்வனிடத்திலே சென்று பயன் பெற்ற ஒருவன், அது பெறக் கருதும் ஒருவனுக்கு அந்தச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/20&oldid=643573" இலிருந்து மீள்விக்கப்பட்டது