பக்கம்:வழிகாட்டி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 19

செல்வனைப்பற்றியும், அவன் இருக்கும் இடத்தைப் பற்றியும், அங்கே போகும் வழியைப் பற்றியும் விரி வாகச் சொல்வது அது. பாட்டு விரிவாக நடப்பதற்கு ஏற்ற அமைப்புக்கள் இந்தப் பிரபந்தத்திலே உள்ளன.

ஆற்றுப்படைகள் தமிழில் பல இருக்கின்றன. திரு முருகாற்றுப்படை சில வகையில் பிற ஆற்றப்படைகளி னின்றும் வேறுபட்டது. மற்ற ஆற்றுப்படைகள், யாரைப் பார்த்துப் புலவர் கூறுவதாக இருக்கிறதோ அவரோடு சேர்ந்த பெயரை உடையதாக இருக்கும். ஒரு புலவர் மற்றொரு புலவருக்கு வழிகாட்டுவதாக இருந் தால் அதற்குப் புலவரலாற்றுப்படையென்ற பெயர் வழங்கும். இது யாரைப் புகழ்வதற்காகப் பாட்டு உண் டாயிற்றோ, அந்தப் பாட்டுடைத் தலைவனாகிய முரு கனுடைய பெயரோடு சேர்ந்து வழங்குகிறது. முருகனி டத்திலே ஆற்றுப்படுத்துவது என்ற பொருளுடையது முருகாற்றுப்படை என்னும் தொடர். மற்ற ஆற்றுப் படைகளில், எதிரே வருபவன் நிலையை வருணித் திருப்பார்கள்; அவனை, 'புலவனே, பாணனே, கூத்தனே' என்பன போன்ற விளிகளால் அழைத்திருப்பார்கள். நானும் உன்னைப்போல் வறுமையில் உழன்றேன்; அந்தச் செல்வனிடம் சென்றேன்; அவன் எனக்குப் பல பல பொருள்களைத் தந்தான்' என்று சொல்வதாக அமைந்திருக்கும். இத்தகைய பகுதிகள் திருமுருகாற்றுப் படையில் இல்லை. ஆயினும், 'முருகனை நோக்கி நீ புறப்பட்டிருக்கிறாய்; நல்ல காரியம். அவன் இன்ன இன்ன இடங்களில் எழுந்தருளியிருக்கிறான். நீ அவனைக் கண்டு வழிபட்டால் அவன் பெறலரும் பரிசிலைத் தருவான்' என்று வழிகாட்டியிருப்பதனால் இது ஆற்றுப் படை ஆயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/21&oldid=643574" இலிருந்து மீள்விக்கப்பட்டது