பக்கம்:வழிகாட்டி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வழிகாட்டி

முருகன் எழுந்தருளியிருக்கும் ஆறு படைவீடு களாகிய திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவா வினன்குடி, திருவேரகம், பழமுதிர்சோலை, குன்று தோறாடல் என்ற தலங்களைப் பற்றிக் கூறும் ஆறு பகுதி களையுடையது இந்த நூல். ஆறு பகுதிகளாகப் பொருளினாற் பிரிவுபட்டிருந்தாலும் எல்லாம் சேர்ந்து ஒரே அகவற்பாவாக நிற்கிறது இது.

முதற் பகுதியில் முருகனது உருவ அழகு, சூரர மகளிர் விளையாட்டு, பேய்மகள் துணங்கை, சூரசங் காரம், மதுரையின் பெருமை, திருப்பரங்குன்றத்தின் இயற்கைவளம் முதலியவற்றைக் காணலாம். இரண்டா வது பகுதியில் முருகனது வாகனத்தின் சிறப்பு, அவனுடைய ஆறு திருமுகங்களின் செயல்கள், பன்னி ரண்டு திருக்கரங்களின் செய்கை, திருச்சீரலைவாய்க்கு அவன் எழுந்தருளுதல் முதலியன வருகின்றன. மூன்றாம் பகுதியில் முருகனை வழிபடும் முனிவர்கள் இயல்பு, அவனைத் தரிசிக்க வரும் தேவர்களின் நிலை, கந்தருவர் காட்சி முதலிய செய்திகள் உள்ளன. நான்காம் பிரிவில் முருகனை வழிபடும் அந்தணர் இயல்பு காணப்படும். ஐந்தாம் பகுதியால் குன்றிலுள்ளார் ஆடும் குரவை, முருகன் தேவ மகளிரோடு வந்து ஆடுதல் முதலிய வற்றை உணரலாம். ஆறாம் பகுதியில் முருகன் எழுந் தருளியிருக்கும் இடங்கள், குறமகள் செய்யும் பூசை, முருகனிடம் சென்று வழிபடும் முறை, அவனைத் துதிக்கும் வகை, அவன் ஏவலர் இயல்பு, அவன் அருள் செய்யும் விதம், பழமுதிர் சோலையின் இயற்கை வளம் முதலியன வருகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/22&oldid=643576" இலிருந்து மீள்விக்கப்பட்டது