பக்கம்:வழிகாட்டி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 21

பாட்டை விரித்துக் கொண்டு போக நக்கீரர் ஆளும் உத்திகள் பல. முருகன் காந்தட் கண்ணியை அணிபவன் என்று சொல்லவருகிறார். அக்காந்தள் வளரும் மலைச் சாரற் சோலையை வருணிப்பாராகி, அங்கே வந்து கோலம் புனைந்து ஆடும் சூரர மகளிரை வருணிக்கிறார். மகளிர் தம்மைப் புனைந்து அழகு படுத்திக் கொண்டு ஆடும் சோலை இத்தகையது; அந்தச் சோலையில் வளர்வது காந்தள்; அதனாலாகிய கண்ணியைப் புனைபவன் முருகன்' என்று ஒன்றைப் பற்றி, அதன் தொடர்புள்ள மற்றொன்றை விரித்து வருணிக்கும் முறையினால் பாட்டு விரிந்து செல்கின்றது. திருப்பரங்குன்றம் மதுரைக்கு மேற்கே உள்ளது என்று சுட்ட வருகிறார்; அங்கே மதுரையின் பெருமையைச் சில அடிகளால் வருணிக்கிறார். முருகன் சூரனைச் சங்கரித்தான் என்று சொல்ல வருகிறார்; பேய்மகள் களித்துக் கூத்தாடும்படி யாகச் சூரனை வென்றான் என்ற முறையில் தொடங்கிப் பேய்மகள் ஆடும் துணங்கையைச் சித்தரிக்கின்றார். இப் படியாக இந்த நூலை 317 அடிகளால் விரித்து அமைத் திருக்கிறார்.

3

நக்கீரர் நமக்குக் காட்டும்.முருகன் பேரழகனாகவும் பெரு வீரனாகவும் பெருங்கருணை வள்ளலாகவும் இருக்கிறான். குறிஞ்சித்திணைக்கு உரிய தெய்வம் என்ற வரையறை இருந்தாலும் அவன் உலகம் முழுவதும் நிரம்பியிருக்கிறான். உருவங்கொண்டும் அருவமாகவும் இருக்கிறான். இயங்கும் பொருளிலும் இயங்காப் பொருளிலும் இருக்கிறான். ஆறு தலங்கள் மாத்திரமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/23&oldid=643577" இலிருந்து மீள்விக்கப்பட்டது