பக்கம்:வழிகாட்டி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வழிகாட்டி

அவன் உறையும் இடங்கள்? பலபல இடங்களில் பல பல உருவத்தில் பல பல இயல்புள்ள மக்கள் அவனைத் தம் தம் இயல்புக்கேற்ற முறைகளிலே வழிபடுகிறார்கள். அவர்களுக்கு இரங்கி அவர்கள் வேண்டியவற்றை அருள் செய்கிறான் முருகன்.

அவன் திருவுருவம் ஒன்று அல்ல; பல. பேரொளிப் பிழம்பாகச் சூரியனைப் போல நிற்பது ஒருருவம். சிறிய சுழல் புனைந்த திருவடியும் கலிங்கம் அணிந்த திரு விடையும் கடம்ப மாலை புனைந்த திருத்தோளும் காந் தளங்கண்ணி அணிந்த திருமுடியும் கொண்டு அருகே தேவசேனையோடு எழுந்தருளியிருப்பது ஒரு கோலம். அழகான கிரீடத்தை அணிந்து கொண்டு இரண்டு காது களிலும் நட்சத்திரத்தைப் போலக் குழைகள் விளங்கப் பிணிமுகம் என்னும் யானையின்மேல் ஏறி, ஒரு கையால் அங்குசத்தைப் பற்றிக் கொண்டு மற்றொரு கையைத் துடையின் மேல் வைத்து, அன்பர்களுக்கு அருள் செய்யும் பொருட்டு வருவது ஒரு கோலம். மயில்மேல் வருவது ஒரு கோலம். ஆட்டுக் கிடாயின் மேல் வருவது ஒரு கோலம்.

உலகத்து இருளை ஒட்டும் பேரொளி படைத்த திரு முகமும் இடையில் ஒரு கரமும் சூரியனைப் பாதுகாக்கும் முனிவர்களுக்குப் பாதுகாப்பாக தூக்கிய மற்றொரு கரமும் கொண்டு நிற்பது ஒரு திறம். கையில் கேடகத் தையும் வேலையும் தாங்கிக் கொண்டு அந்தணர் வேள்வி யைப் பாதுகாக்க நிற்பது ஒரு திறம். சின்முத்திரை காட் டும் திருக்கரமும் மாலையைப் பற்றிய திருக்கரமும் பூண்டு உபதேசம் செய்யும் குருபரனாக வீற்றிருப்பது ஒரு திறம். போர்க்களத்தில் வெற்றி பெற்றுக் கள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/24&oldid=643578" இலிருந்து மீள்விக்கப்பட்டது