பக்கம்:வழிகாட்டி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 23

வேள்வி செய்கையில் ஒரு கை மணியை அசைக்க, மற்றொரு கை ஆணையிட்டுச் சுழல, வீரனாக நிற்பது ஒரு திறம். வள்ளி நாச்சியாரோடு அமர்ந்து இன்பம் மிக்கு உலகில் மழை பொழிய ஆணையிடும் ஒரு கரமும் தேவமகளிர் கணவன் மாரோடு வாழும்படி மனமாலை வழங்கும் ஒரு கரமும் படைத்து எழுந்தருளியிருப்பது ஒரு திறம்.

அவன் திருமார்பு விரிந்தது. அதில் உள்ள உத்தம இலக்கணமாகிய மூன்று கோடுகள் தோளளவும் சென் றிருக்கும். ஆறு முகமும் பன்னிரு கரங்களும் ஒருங்கே கொண்டு தோன்றும் நிலையும் முருகனுக்கு உண்டு.

தேவமகளிரோடு உவகை மிக்குக் கூத்தாடி நிற்கும் இன்பக்கோலம் ஒரு சமயம் புனைவான். சிவந்த திரு மேனியும் சிவந்த திருவாடையும் உடையவனாகிக் காதிலே அசோகந் தளிரைச் செருகிக் கொண்டு கச்சை அணிந்தும் வெட்சி மாலை புனைந்தும் குழலூதியும் கொம்பூதியும் வேறு பல வாத்தியங்களை வாசித்தும் நெடிய உருவத்தோடு நிற்பான். ஆடையை நிலத்திற் புரளப் புரள உடுத்துப் பல மகளிர் கூடி ஆடும் இடத்தில் அவர்களுடைய வரிசையில் முதலில் நின்று கை கொடுத்து ஆடுவான்.

இவையல்லாமல் தெய்வத்தன்மை மிக்கு வானளவும் உயர்ந்து நின்ற பயங்கரமான விசுவரூபத்தையும் உடை யான் அவன். ஆனாலும் அடியவர்களுக்கு இன்பத்தையும் கவர்ச்சியையும் உண்டாக்கும் மணங்கமழ் தெய்வத்து இளநலமும் உடையவன். அந்த உருவம் தொன்மை யானது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/25&oldid=643579" இலிருந்து மீள்விக்கப்பட்டது