பக்கம்:வழிகாட்டி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 வழிகாட்டி

தளர்த்தி முருகன் உடுத்திருக்கிறான். ஆடையை மேலே மடக்கிக் கொள்வது மரியாதைக்கு அடையாளம். ஏவலாளர் ஆடையைத் துக்கிக் கட்டிக் கொள்வார்கள். பிறரால் மதிக்கப்பெறும் உயர் பதவியுடையவர் பாதம் மறைய உடுத்துக்கொள்வர். இன்றும் அரசர் உடை நிலத்தின்மேல் புரளப் புரள இருப்பதைக் காணலாம்.

முருகன் பெருந்தலைவன். அவன் நிலத்திலே புரளும் படியாகத் துகிலை உடுத்திருக்கிறான்.

குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல் மருங்கிற் கட்டிய நிலன்நேர்பு துகிலினன். (சிறிய புள்ளிகளை உடையதாய் மனமும் தன்மை பும் மென்மையும் உடையதாய் இடுப்பிலே கட்டிய, நிலத்திலே புரளும் துகிலை உடையவன்.

பொறி - புள்ளி.)

குரவையாடும் கூத்தன் அவன் புஜபல பராக்கிரமம் உடையவன். அவன் தோள்கள் முழவைப் போலப் பூரித்து விளங்குகின்றன. அவற்றால் குரவை யாடும் ம்களிரைப் பற்றிக் கொள்கிறான். மெல்லிய தோளையும் மானைப் போன்ற தோற்றத்தையும் உடைய அந்த மகளிருக்குத் தவைக்கை தருகிறான். பல மகளிர் கைகோர்த்து ஆடும் குரவைக் கூத்தில் முதல்வனாக ஒரு வீரன் இருந்து கைகொடுத்துத் தானும் ஆடுவது வழக்கம். தலைக்கை தருதல் என்பது அதுவே. முருகன் இந்த மகளிரைத் தழுவித் தலைக்கை தந்தருளுகிறான்.

குன்றிலே ஆடும் குறவர்களின் முன்னே அவர்கள் ஆடும் குரவைக் கூத்துக்கு ஏற்றத் திருக்கோலமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/130&oldid=643776" இலிருந்து மீள்விக்கப்பட்டது