பக்கம்:வழிகாட்டி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றுதோறாடல் 129*

செயலும் உடையவனாகக் குன்றுதோறும் சென்று இவ்வாறு விளையாடல் புரிவதும் முருகனுடைய இயல்பாகும்.

முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி மென்றோட் பல்பிணை தழிஇத் தலைத்தந்து குன்றுதொறாடலும் நின்றதன் பண்பே; அதாஅன்று. (மத்தளத்தைப் போலப் பெருத்த விசாலமான கைகளால் ஏற்ற வண்ணம் ஏந்திக் கொண்டு மெல்லிய தோளையுடைய மானைப் போன்ற பல மகளிரைத் தழுவி அவர்களுக்கு முதற்கை கொடுத்து, மலைகள் தோறும் விளையாடுதலும் நிலைபெற்ற அவனது குணமாகும்.

இயல - பொருந்த பிணை - மானைப்போன்ற

மகளிர்)

பூசாரி வழிபட, குரவர் குரவையாட, அவர் முன்னே மகளிரோடு தானும் எழுந்தருளி வந்து அவர் பாடலைக் கேட்டு மகிழ்ந்து அந்த மகளிரோடு ஒன்றி ஆடி இன்புறும் திரு விளையாட்டை உடையவன் முருகன். அன்பர்களின் நிலைக்கு ஏற்ப அவர்களோடு ஒன்றி அருள் விளையாடல் நடத்தும் முருகனது பெருங் கருணைத் திறத்தைக் குன்றுதோறாடல் குறிக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/131&oldid=643779" இலிருந்து மீள்விக்கப்பட்டது