பக்கம்:வழிகாட்டி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர் சோலை

முருகன் உறையும் தலங்கள் நான்கை முதலிலே சொல்லி, அப்பால் எல்லா மலைகளிலும் அவன் உறைந்து அருள் செய்வானென்பதையும் சொன்னார் நக்கீரர். பிறகு முருகனது ஆறாவது படைவீடாகிய பழமுதிர் சோலையைப் பற்றிச் சொல்ல வருகிறார்.

முதலில் திருப்பரங்குன்றத்தைப்பற்றிச் சொல்லும் போது, இறைவனைக் காணும் அவாவுடைய புலவனுக்கு முன்னுரையாகச் சொல்ல வேண்டிய வற்றைச் சொல்லிவிட்டுச் சுருக்கமாகப் பரங்குன்றத் தைப் பற்றிச் சொன்னார். அவ்வாறே, இறுதிப் பகுதி யாகிய இதில் முருகன் பழமுதிர் சோலையில் எழுந் தருளியிருக்கிறான் என்ற வாய்பாட்டில் சொல்லாமல், பழமுதிர்சோலையிலே எழுந்தருளியிருக்கும் முருகன் அருள்புரிவான் என்று சொல்லும் முகத்தால் அத்தலத் தைச் சுருக்கமாக வருணிக்கிறார். அதற்கு முன்பு இப் பகுதியின் ஆரம்பத்தில், 'முருகன் முன்னே சொன்ன தலங்களில் மாத்திரம் இருப்பவன் அல்லன்; இன்னும் பல இடங்களில் அவனைக் காணலாம்' என்பதை அறிவுறுத்துகிறார். இயற்கையெழில் நிலவும் இடங்களும், மக்கள் கூடி ஒன்றி இன்புறும் இடங்களு மாகப் பல பல இடங்களைக் கூறி, இங்கெல்லாம் முருகன் எழுந்தருளியிருப்பான் என்று சொல்லி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வழிகாட்டி.pdf/132&oldid=643781" இலிருந்து மீள்விக்கப்பட்டது